Published:Updated:

`மரங்களில் ஆணியடித்தால் என்ன தண்டனை தெரியுமா?' - எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர்

மரங்களில் விளம்பரம்
மரங்களில் விளம்பரம்

மரங்களில் ஆணி அடித்தல், கம்பிகள் அமைத்தல் போன்ற தேவையற்ற நடவடிக்கைகளால் மரங்கள் பட்டுப்போவதுடன் அவற்றின் வாழ்நாளும் குறைவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் நடப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. இந்த மரங்கள் பாதிக்கப்படாமலிருக்க, அவற்றின் வளர்ச்சி சிதையாமலிருக்கும் வகையில் பாதுகாக்க வேண்டும்.

இதுகுறித்த புகார்களை மக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வழியாகத் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களுடைய நிறுவனத்தின் விளம்பர அட்டைகள் மற்றும் பலகைகளை, மரங்களில் ஆணி அடித்து மாட்டிவைத்து விளம்பரம் செய்கிறார்கள். மேலும், மரங்களில் பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகளை அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருள்கள் மரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகளால் மரங்கள் பட்டுப்போவதுடன் அவற்றின் வாழ்நாளும் குறைவதாகச் சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்.

எனவே, மரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப் பலகைகள், அலங்கார மின் விளக்குகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றைச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள்/வர்த்தக நிறுவனங்கள் அவர்களாகவே அகற்ற வேண்டும்.

மரங்களில் ஆணி அடித்தல்
மரங்களில் ஆணி அடித்தல்

அகற்றத் தவறினால், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 326-1 என்கிற விதியின்படி, அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த புகார்களை மக்கள் 1913 என்ற இலவசத் தொலைபேசி எண் வழியாகத் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு