Published:Updated:

இயற்கையின் இறுதி ஆயுதம்! காலநிலை மாற்றம்: ஆபத்தா... வதந்தியா?

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் ( ஹாசிப்கான் )

தமிழில் இன்றளவும் கிடைத்த பழைமையான நூல் தொல்காப்பியம். அதன் ஆசிரியர், மனித வாழ்வின் முதற்பொருளை நிலமும் பொழுதும் என்று வாழிடத்தோடு காலத்தையே முன்னிறுத்துகிறார்.

நம் வீடு (பூமி) பற்றி எரிவதை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டாக வேண்டும்!
கிரேட்டா துன்பெர்க்
Climate change
Climate change
Vikatan

காலநிலை மாற்றம் என்றால் என்ன?

அது, வாரத்தின் இறுதிநாள். அந்த மெல்லிய மாலைப் பொழுதில், வானம் தன் வெட்கத்தை மேகம்கொண்டு மறைத்து, மேடு பள்ளத்தையெல்லாம் மழைநீரால் நிரப்பக் காத்திருந்தது. மழையின் அறிகுறி அங்கங்கு தென்பட, பறவைகள் படபடவெனக் கூடுநோக்கி பறந்துகொண்டிருந்தன. இதையெல்லாம் கடந்து வரும் குளிர்ந்த காற்று நம்மைத் தீண்டினால், மனம் குதூகலமாகி ``ஆஹா என்ன... கிளைமேட் (climate)" என்று நிச்சயம் சொல்லத் தூண்டும்!

``வெயிட்... வெயிட்!

அதன் பெயர் கிளைமேட் அல்ல. கிளைமேட் (Climate) என்பது குறைந்தது பத்தாண்டு காலமாவது ஒரு பகுதியில் நிலவிவரும் தட்பவெப்பநிலை அல்லது பருவநிலைச் சூழல். ``அப்போ, இதை எப்படி அழைப்பது?'' வானிலை (Weather). ஆம். வானிலை என்பதே தினசரி மாற்றங்களைக் குறிக்கும் சொல்லாகும். அதன் மாற்றத்தை அறிவிப்பதுதான் வானிலை அறிக்கை (Weather report). இதை எப்படி அழைத்தால் என்ன, இதிலென்ன வந்துவிடப்போகிறது என்று கேட்கிறீர்களா..?

தமிழில் இன்றளவும் கிடைத்த பழைமையான நூல் தொல்காப்பியம். அதன் ஆசிரியர், மனித வாழ்வின் முதற்பொருளை 'நிலமும் பொழுதும்' என்று வாழிடத்தோடு காலத்தையே முன்னிறுத்துகிறார்.

காலநிலை பற்றி அறிந்துகொள்வதென்ன அத்தனை அவசியமா?

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Vikatan Infographics

விவசாயம் செய்யத் தொடங்கிய பின்னர்தான், மனிதன் நாகரிகமடையத் தொடங்கினான் என்பது ஆய்வாளர்கள் கூற்று. ஆனால், ஜப்பானிய இயற்கை வேளாண்மையாளர் மசானபு ஃபுகோகா, இயற்கை வேளாண்மை பற்றி இப்படிக் கூறுகிறார், "வெயில் காலம் வந்ததும் மரத்தின் இலைகள் உலரத் தொடங்குகின்றன. அந்த வறண்ட இலைகள், வசந்த காலத்தில் உதிர்ந்து மண்ணில் வீழ்கின்றன. பின்னர், அதிகமாகக் காற்று அடிக்கும் காலத்தில் அவை மரத்தின் அடியில் மட்டுமல்லாமல், மணற்பரப்பு முழுவதும் படர்கின்றன. அதற்கடுத்த மழைக்காலத்தில், மழைநீருடன் கலந்து மக்கி, இயற்கை உரமாவதுடன், நீர்க் காப்பை உறுதிசெய்து மண் வளத்தையும் பெருக்குகின்றன.

இதில் எங்கே மனிதன் வந்தான்? ஆம், நாகரிகம் அடையும் முன்பே காலநிலைதான் (Climate) விவசாயம் செய்தது."

நம்முடைய மிக முக்கியமான கடமை, பூமியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைக்கவேண்டியதுதான்.
ஃபிரான்கோய்ஸ் ஹோலாண்ட் (Francois Hollande), ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

ஆனால், அத்தகைய காலநிலைதான் இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதைத்தான் உலக அரங்கில் காலநிலை அவசரம் (Climate emergency) என்கிறோம். ஏதோ இரண்டு மூன்று ஆண்டுகள் பருவமழை பொய்த்தால், அது காலநிலை மாற்றமாகாது என்பது மேற்சொன்ன விளக்கத்தின் மூலம் உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். பன்னெடுங்காலமாக உலகெங்கிலும் பருவ மழையும் கோடை வெயிலும் வழக்கமான முறைமையிலிருந்து திரிந்து மாறிக்கொண்டிருக்கிறது. அதைத்தான் `காலநிலை மாற்றம்' என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதுவே வீரியமடைந்து, பல பேரழிவுகளுக்குக் காரணமாகிக்கொண்டிருப்பதால், இப்போது `காலநிலை அவசரம்' உலகம் முழுக்க பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்காகப் போராடும் பதினாறு வயது சிறுமியின் கதை!

உலக நாடுகளின் எதிர்வினைகள்

2016-ம் ஆண்டு மே மாதம், ஆஸ்திரேலியாவில் அதிகார மட்டத்தைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள், அந்நாட்டின் தேசியத் தலைநகரான கான்பெராவில் (Canberra) கூடினர். அங்கு, ஒட்டுமொத்தமாகக் காலநிலை அவசரம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையொட்டி, 2019-ம் ஆண்டு மே மாதம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் சுற்றுச்சூழல் செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove), காலநிலை அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாடும் காலநிலை அவசரத் தீர்மானத்தை (Climate emergency declaration) நிறுவிவருகின்றன.

உலகையே அதிரவைத்த இந்த நெருக்கடி நிலை எந்தமாதிரியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? உலக அளவில் காலநிலை மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்பவருள் முதன்மையான பேராசிரியர் ஹான்ஸ் ஜோச்சிம் ஷெல்ன்ஹுபர் (Hans Joachim Schellnhuber) , ``நாம் காலநிலை அவசரத்தைப் புரிந்துகொள்ளத் தவறினோமானால், அதன் இழப்பு 3 லட்சம் கோடி யூரோவைத் தாண்டும். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 77,525,000 கோடி ரூபாய்க்கு மேல். அத்துடன் பல நாகரிகங்கள் அழிந்துவிடும். மனித உயிரிழப்பு அளவிட முடியாததாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்ற அச்சத்திற்கு உள்ளாகி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக அரசுகள் செயல்பட வேண்டுமென்று போராட்டத்தில் இறங்கிய உலகின் இளம் சூழலியல் போராளிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பச்சைநிறப் பட்டனை கிளிக் செய்யுங்க!

இந்தக் காலநிலை அவசரத் தீர்மானத்தின் நோக்கமே, கார்பன் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பதுதான். அதற்கு நாம் மாற்று எரிபொருள்களை நாடுவதோடு காடுகளை அழிக்காமல் மேன்மேலும் காடுகளை வளர்க்கவேண்டும். இப்போது தொடங்கினாலும் இதெல்லாம் செய்து முடிக்க, குறைந்தது 20 ஆண்டுகளாவது ஆகும்.

உங்களுக்கான கேள்வி!

காலநிலை மாற்றத்தால் நம் உரிமைகளை இழந்துகொண்டிருக்கிறோம்!

ஆகவே, காலநிலை மாற்றத்தை மறுத்து, பொருளாதார ஆதாயம் பெறுவதை நாம் நிறுத்தியாக வேண்டும்.

காலநிலை மாற்றத்தைச் சரிகட்ட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னையில் நடந்த போராட்டம்

காலநிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதை எப்படிச் சரிசெய்வது என்பதே சரியான விவாதமாக இருக்க முடியும்.
ஸ்டீவன் ச்சூ (Steven Chu), இயற்பியல் பேராசிரியர்.

காலநிலை மாற்றம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள்

காலநிலை மாற்றத்தைச் சரிசெய்வது சாத்தியமா? இல்லை, நாம் மிகவும் காலம் தாழ்த்திவிட்டோமா...

மனிதர்கள், ஏற்கெனவே காலநிலை மாற்றத்தை முற்றிலுமாகத் தொடங்கி வைத்துவிட்டோம். அதற்கான விளைவுகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நாம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றுவதை இன்றே நிறுத்தினால்கூட, பூமி சூடாகிக் கொண்டிருப்பது அடுத்த சில பத்தாண்டுகளுக்காவது நடக்கும். காலம் கடந்துவிட்டது என்று சொல்லமுடியாது என்றாலும் காலம் கடந்துகொண்டேயிருக்கிறது. விரைந்து செயல்பட்டால், அடுத்த சில பத்தாண்டுகளிலாவது இதைச் சரிசெய்து, நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான பூமியைப் பரிசளிக்க முடியும்.

Global Warming
Global Warming
Pixabay

காலநிலை மாற்றம் உண்மைதானென்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்களா?

97 சதவிகித விஞ்ஞானிகள், காலநிலை மாற்றம் மற்றும் பூமி சூடாதல் போன்ற பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும், அவற்றை மனிதச் செயல்கள்தான் தொடக்கிவைத்தன என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

பூமியின் வெப்பம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதே புவி வெப்பமயமாதல். காலநிலை மாற்றத்தின் ஒருபகுதிதான் அதுவும். புவி வெப்பமயமாதல் என்பது பூமியின் வெப்பம் அதிகரிப்பதை மட்டுமே குறிக்கிறது. காலநிலை மாற்றம், மற்ற பல மாற்றங்களையும் பேசுகிறது.

உங்களுக்கான கேள்வி!

கடல்கள் தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டுதானிருக்கின்றனவா? பூமியின் மேல் உறைந்திருக்கும் மொத்தப் பனியும் உருகிவிட்டால் என்ன நடக்கும்? அது பூமியின் சுழற்சியைப் பாதிக்குமா?

ஆம், பெருங்கடல்கள் அனைத்தின் தட்பவெப்பநிலையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த வெப்பமடைதல் 1988-ம் ஆண்டு தொடங்கியது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் வெப்பம், ஆழ்கடல் வரை செல்லத்தொடங்கியது. இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

நிலப்பகுதியில் படர்ந்திருக்கும் பனி, மலைப் பகுதிகளில் பல்லாண்டுகளாக உறைந்துள்ள பனிப்பாறைகள், பல்லாயிரம் ஆண்டுகளாக கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகாவில் உறைந்துள்ள பனி மலைகள் அனைத்தும் உருகி, கடலோடு கலந்தால், நிச்சயம் பூமியின் சூழற்சியில் பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு, கிரீன்லாந்து பனிப்பாறைகள் முற்றிலும் உருகிக் கடல்நீரோடு கலந்தால், கடல்மட்டம் இப்போது இருப்பதைவிட 23 அடிகள் அதிகமாகும். அதனால், பூமியின் சுழற்சிவேகம் குறையும். ஒரு நாளுக்கான நீளம், சுமார் இரண்டு மில்லி விநாடிகள் அதிகமாகும்.

அடுத்த கட்டுரைக்கு