Published:Updated:

கூவம் நதி வரலாறு: "நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்!"

இப்போதைய கூவத்தின் நிலை, கடந்த சில ஆண்டுகளின் கூவத்தின் கதை... ஆகியவை நம் எல்லோருக்கும் தெரியும். இந்த நதி 1969-ல் எப்படி இருந்தது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை போல சென்னையின் மற்றுமொரு முக்கியமான அடையாளம், கூவம் ஆறு. ஆனால், முந்தைய அடையாளங்களைப் போல பெருமைமிகு ஒன்றாக இல்லை, கூவம். அதற்கு காரணம் நாம்தான். நல்லதொரு நதியாக, இந்த நகரத்தை அழகாக்கிய கூவத்தை இன்று கரையில் நின்றுகூட காணமுடியாத அளவுக்கு சாக்கடையாக மாற்றிவிட்டோம். இது 2019. இப்போதைய கூவத்தின் நிலை, கடந்த சில ஆண்டுகளின் கூவத்தின் கதை... ஆகியவை நம் எல்லோருக்கும் தெரியும். இந்த நதி 1969-ல் எப்படி இருந்தது தெரியுமா?

பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. இதே நிலைதான் அன்றும் இருந்திருக்கிறது. அன்றைய கூவத்தின் கதையை, கூவமே சொன்னால் எப்படி இருக்கும் என விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

06/04/1969 ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை உங்களுக்காக...

என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? உங்கள் மூக்கைக் கேளுங்கள்; அது சொல்லும் நான் யாரென்று! ஆமாம், நான் சாட்சாத் கூவம் ஆறேதான்!

என்னைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் ஓர் ஏளனம். ஏன் தெரியுமா? என் பெருமைகளைப் பற்றி நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. எனக்குச் சமமாக இந்த இந்தியா விலேயே ஒரு நதியைக் குறிப்பிட வேண்டுமானால் அது 'கங்கை'தான்!

மூர்ச்சை போட்டு விழாதீர்கள்! ஜனங்களின் பாவ அழுக்கை யெல்லாம் `கங்கை' சுமக்கிறதாம். இந்தச் சென்னைப் பட்டணத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளின் அழுக்கையெல்லாம் சாக்கடை வடிவில் நான் சுமக்கிறேன். இப்போது புரிகிறதா?

நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு. ஆமாம்! ஊருக்குள் ஓடும் ஒரு நதியில் சாக்கடையைக் கலந்து ஏன் இப்படி நாற்றமடிக்க விடுகிறார்கள்?

சென்னைவாசிகள் எனக்கு அனுப்பி வைக்கும் சாக்கடை நீரையும் கழிவையும் வைத்து நான் சில `ரசவாத வித்தைகள்' செய்கிறேன். அதாவது, அந்தக் கழிவுப் பொருட்களை விஞ்ஞான முறையில் `பிரபல வியாதி'களாக மாற்றி ஜனங்களுக்கே மீண்டும் விநியோகித்து விடுகிறேன்!

இதைச் செய்வதற்காக நான் கோடானு கோடி வீரர்கள் கொண்ட `கொசுப் படை' ஒன்றை வளர்த்து வருகிறேன்.

ஜனங்களுக்கு வருகிற `காய்ச்சல்'களிலேயே ரொம்பவும் உயர்தரமான மலேரியா காய்ச்சலை எங்கள் கொசுப் படையினர்தான் உற்பத்தி செய்கிறார்கள்.

கூவம் ஆறு
கூவம் ஆறு
Photo: Srinivasulu.V / Vikatan
"நான் வந்தது அதிசயம்; ஆனா, அதான் பேரதிசயம்..!" இது 90's ரஜினி #VikatanOriginals

கூவத்திற்குக் கிளை நதிகளும் இருக்கின்றன. அவை தெருக்களில் ஏராளமாக ஓடுகின்றன. சில பகுதிகளில் அவை பிரம்மபுத்ரா நதி உடைப்பெடுத்துப் பிரவகிப்பதுபோல் ஆங்காங்கே வெள்ளக் காடாகப் பிரவாகம் செய்கின்றன.

அது மட்டுமா? சாக்கடைத் தண்ணீரின் போக்குவரத்துச் சாதனமான 'பீப்பாய் வண்டிகள்', வறண்டு கிடக்கும் தெருக்களிலெல்லாம் சாக்கடை நீரை அபிஷேகம் செய்து குளிர வைக்கின்றன!

கோடம்பாக்கத்தில் 'பேசும் படம்' அலுவலகத்துக்கு எதிரே போய்ப் பாருங்கள்; தெரு ஓரத்தில் சாக்கடை நீரைப் பீப்பாய் பீப்பாய்களாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்!

``பாருங்கள் சார், நாற்றங்கால்வாய் கரையிலே குடியிருக்கும் எங்கள் கதியை! நாங்க ஒன்றும் கார்ப்பரேஷனுக்கோ கவர்ன்மென்ட்டுக்கோ தெரியாமல் இங்கே குடியிருக்கவில்லை. நாங்க இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். எலெக்ஷன் சமயத்திலே ஞாபகமா ஓட்டுக்கேட்க வந்துவிடுகிறார்களே! ஓட்டு வாங்கிக்கொண்டு போனால், போனதுதான்! அப்புறம், அடுத்த எலெக்ஷனுக்குத்தான் திரும்பி வராங்க. லைட் இல்லை, குடிநீர் இல்லை என்பதெல்லாம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயங்கள். ஆனால், மனுஷர்கள் குடியிருக்கிற இடத்துக்குப் பக்கமாக ஓடுகிறதே சாக்கடை, அதைச் சுத்தம் பண்ண வேண்டும் என்றாவது நினைக்கவேண்டாமா? கூழோ கஞ்சியோ, நமக்குக் கிடைக்கிறதை நிம்மதியா குடிக்க முடியலே. `கப் கப்'பென்று சாக்கடை நாற்றம் அடித்து, சாப்பிட்டதை வெளியிலே கொண்டாந்துடுது. தின்னும் பதார்த்தம், குடிக்கும் நீர் எல்லாத்துலேயும் கொசு வந்து குத்துது'' என்கிறார் ஜோதி நகரில் இருக்கும் ஆர்.வீரராகவன்.

மேலும்,

  • கூவத்தின் தூய்மைக்காக அப்போதைய அரசு என்ன செய்தது?

  • அப்போது அரசு அறிவித்த புது படகுத் திட்டம்...?

முழு கட்டுரையை வாசிக்க: http://bit.ly/2M1IEBN

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு