Published:Updated:

ஆஸ்திரேலிய காட்டுத்தீ - 1851 முதல் 2019 வரை! அழிவுகளும் படிப்பினைகளும்! #VikatanInfographics

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுமார் 150-க்கும் அதிகமான வீடுகள் எரிந்துள்ளன. 2,50,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளன.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியான நியூ சௌத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லேண்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாகப் பயங்கரமான `காட்டுத்தீ' ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டுத்தீயில் சுமார் 150-க்கும் அதிகமான வீடுகள் எரிந்துள்ளன. 2,50,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளன.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

மேலும், இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். காட்டுத் தீ ஏற்பட்டுள்ள இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ பரவும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டது மனிதர்கள் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள், லட்சக் கணக்கான மரங்களும்தான். மேலும், 2,000 ஹெக்டேர் அளவில் அமைக்கப்பட்டிருந்த கோலா சரணாலயம் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத்தீ ஆஸ்திரேலிய மக்களுக்குப் புதிதல்ல. 1851-ம் ஆண்டிலிருந்து 2019 வரை ஒவ்வொரு வருடமும் சுமார் 100-க்கும் அதிகமான காட்டுத்தீ அங்கு ஏற்பட்டுள்ளன.

Vikatan
Australia Fire
Australia Fire
1851-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20,000-க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்துள்ளன. 2,50,000-க்கும் அதிகமான விலங்குகள் இறந்துள்ளன.

1851-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியான விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1.2 கோடி ஏக்கர் நிலம் தீயில் கருகியுள்ளது. குறிப்பாக 1,00,000 ஆடுகளும் ஆயிரக்கணக்கான விலங்குகளும் தீயில் இறந்துள்ளன.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

2009 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 1851-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20,000-க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்துள்ளன. 2,50,000-க்கும் அதிகமான விலங்குகள் இறந்துள்ளன. இதுவரை சுமார் 160 கோடி பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது வேகமாக வீசும் காற்றில் கலந்து மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் பணியில், தீயணைப்பு வீரர்கள், அந்நாட்டு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். ஆயினும், இன்னும் 3 வாரத்துக்கும் மேலாகத் தீ நீடித்து எரியும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது, அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, சூழலியலாளர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

காட்டுத்தீ ஏற்படக் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் அதிக வெப்பம் மற்றும் வறட்சி நீடிக்கும், வறண்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பமான மாதங்களில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படும். கரிம வாயு வெளியிடுவதன் அளவு இங்கு அதிகமாக இருப்பதும், காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், இரவு குளிராக இருந்தாலும், அதிக வெப்பநிலையும் காற்றின் குறைந்த ஈரப்பதமும், வேகமாக வீசும் காற்றும் தீ விரைவாகப் பரவுவதற்கு வழிவகுக்கின்றன.

2019 ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. சுமார் 83 சதவிகித காடுகள் தீயில் அழிந்தன. இந்த ஒரு வருடத்தில் சுமார் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன. 2018-ம் ஆண்டில் இந்தியாவையே உலுக்கிய சம்பவங்களில் குரங்கணி காட்டுத் தீ விபத்தும் ஒன்று. 23 பேர் பலியான சோகம் இன்னும் மக்கள் மனங்களில் ஆறாத வடுவாக இருக்கிறது. 2015-ல் கடுமையாக வீசிய வெப்பக்காற்றால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
ஆஸ்திரேலிய காட்டுத்தீ... கோலா கரடிகளைக் காப்பாற்றப் போராடும் தம்பதி!
காட்டுத்தீ ஏற்படக் காரணம்?
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இதற்குக் காரணமாக இருக்கும் புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE
அமேசான் காட்டுத்தீ... இந்தியா அதிகாரபூர்வமாக வாய்திறக்காததன் `அரசியல்'!

புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே வெள்ளம், சூறாவளி, வறட்சி, விவசாயப் பாதிப்பு, நீர்ப் பற்றாக்குறை, காட்டுத்தீ எனப் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் மனிதர்களைவிட அதிகம் பாதிக்கப்படுவது விலங்குகளும் பறவைகளும்தான்.

AUSTRALIA FIRE
AUSTRALIA FIRE

நாம் வாழ்ந்து வரும் பூமி, காலநிலை மாற்றத்தால் பல்வேறு விதமான இயற்கைப் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. அதற்குக் காரணமாக இருப்பவர்கள் மனிதர்கள்தாம். இதுநாள் வரை ஏற்பட்ட பாதிப்புகளை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு காலநிலை மாற்றத்திலிருந்து பூமியைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.