Published:Updated:

வயநாடு: சுற்றுலாப் பயணிகளுக்கு மான்கறி; வெடிகுண்டு பதுக்கல்! -அதிர்ச்சி கொடுத்த தங்கும் விடுதி

வெடிகுண்டு
வெடிகுண்டு

வயநாட்டில் செயல்பட்டுவந்த தனியார் தங்கும் விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட புள்ளிமான் சடலத்துடன், தங்கும் அறையில் வெடிகுண்டு, தோட்டா, துப்பாக்கி போன்றவற்றையும் பதுக்கிவைத்திருந்திருக்கிறார்கள்.

கேரள மாநிலம், வயநாடு, புல்பள்ளி வனப்பகுதியில், புள்ளிமான்கள் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்படுவதாக, கேரள வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் வன அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தேடுதல் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

புள்ளி மான்
புள்ளி மான்

வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இதே பகுதியில் செயலபட்டுவரும் தனியார் தங்கும் விடுதி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்தத் தங்கும் விடுதிக்குள் நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அதிகாரிகள். அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட புள்ளி மான் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

வெடிகுண்டுகள், தோட்டா, துப்பாக்கி போன்றவையும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இவை அனைத்தையும் பறிமுதல் செய்து. இது தொடர்பாக மூன்று பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மான் வேட்டை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``இந்தத் தனியார் விடுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடியிருப்பதைக் கண்டறிந்தோம். விடுதி அறையில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

வெடிகுண்டு
வெடிகுண்டு

அவற்றைப் பறிமுதல் செய்து, விடுதி உரிமையாளர் ரெஜீஷ் (37), அவரின் நண்பர்கள் ராஜேஷ்(39), குமார்(37) ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்தக் கும்பல் வனவிலங்குகளை அடிக்கடி வேட்டையாடி சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து செய்து கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது. இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு