Published:Updated:

`புயல், கடல் கொந்தளிப்பு வந்தாலும் அவை காக்கும்!' -சட்டவிரோத வலைகளால் அழியும் பவளப் பாறைகள்

கரை ஒதுங்கும் பவளப்பாறைகள்

தீவுப்பகுதிகளைப் பாதுகாத்து வருவதுடன், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்கிவரும் இத்தகைய பவளப்பாறைகள் தவறான மீன்பிடி முறைகளால் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கிவருகின்றன.

`புயல், கடல் கொந்தளிப்பு வந்தாலும் அவை காக்கும்!' -சட்டவிரோத வலைகளால் அழியும் பவளப் பாறைகள்

தீவுப்பகுதிகளைப் பாதுகாத்து வருவதுடன், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்கிவரும் இத்தகைய பவளப்பாறைகள் தவறான மீன்பிடி முறைகளால் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கிவருகின்றன.

Published:Updated:
கரை ஒதுங்கும் பவளப்பாறைகள்

அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ராமேஸ்வரம் தீவுப் பகுதிக்கு பாதுகாப்பாக விளங்கிவரும் பவளப்பாறைகள் பாதிப்படைந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கும் பவளப்பாறைகள்
கடற்கரையில் கரை ஒதுங்கும் பவளப்பாறைகள்

ராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் தொடங்கி தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகளில் செறிந்து கிடக்கும் உயிரின வளத்தினாலும் உயிரினப் பன்மயத்தாலும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கமாகப் பார்க்கப்படுகிறது மன்னார் வளைகுடா. இப்பகுதி தனித்துவம் வாய்ந்த உயிரினப் பன்மயம், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்ததாக உள்ளதால் உயிர்க்கோள காப்பகமாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி முறைகள் குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இழுவலையில் அதிக எடை கொண்ட உருளைகளைக் கட்டி கரையிலிருந்து இழுத்தல், இரட்டை மடி எனப்படும் மிகப்பெரிய வலையைப் பயன்படுத்துதல், கடற்கரையை ஒட்டிய உள்கடல் பகுதிகளில் இழுவலையைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலையும் மீன் வளத்தையும் பாதிக்கும்படி வெடிவைத்து மீன் பிடித்தல், சுருக்குமடி வலை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை உள்ளன.

மன்னார் வளைகுடா தீவுகள்
மன்னார் வளைகுடா தீவுகள்

ஆனால், இந்தத் தடைகள் அனைத்தும் பெயரளவுக்கே உள்ளன. சீசன் காலங்களில் இரட்டை மடி மீன்பிடித்தலையும் சுருக்குமடி மீன்பிடித்தலையும் மீன்வளத் துறையினர் கண்டுகொள்வதில்லை. இதனால் பெரிய விசைப் படகுகளையும் பெரிய நாட்டுப் படகுகளையும் வைத்திருக்கும் மீனவர்கள் அரசின் தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்துப் புகார் செய்தாலும்கூட பெயரளவுக்கு நடவடிக்கை என்ற பெயரில் அபராதம் விதிப்பதும் அரசியல் தலையீடுகளால் அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்துவிடுவதும் தொடர் நிகழ்வாக இருந்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவுப் பகுதியை புயல், கடல் கொந்தளிப்பு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து வரும் பவளப்பாறைகள், இதுபோன்ற தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் அழிந்துவருகின்றன. தீவுப் பகுதியில் 104 வகையான பவளப்பாறைகள் உள்ளன. தீவுப்பகுதிகளை பாதுகாத்து வருவதுடன், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்கிவரும் இத்தகைய பவளப்பாறைகள் தவறான மீன்பிடி முறைகளால் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கிவருகின்றன.

பவளப்பாறைகள்
பவளப்பாறைகள்

ராமேஸ்வரம் ஓலைக்குடா தொடங்கி மண்டபம் வரை பாதிப்புக்குள்ளான பவளப்பாறைகள் கரை ஒதுங்கியுள்ளன. இதனால் ராமேஸ்வரம் தீவுப்பகுதி கடல் அரிப்பாலும் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு காரணமாக உள்ள மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது இனியாவது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதன் மூலம் தீவுப்பகுதியையும், மன்னார் வளைகுடா கடலில் வாழும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தையும் காக்க மீன்வளத் துறையினர் முன்வர வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism