Published:Updated:

தங்கத்தை விட மேலானது தண்ணீர்; நன்னீரை மாசுப்படுத்தாமல் காப்பதற்கு வல்லுநர் சொல்லும் யோசனைகள்!

குளம், கண்மாய்களில் சேகரிக்கப்படும் தண்ணீர்

முடிந்த வரை தண்ணீரை சேமிப்பதோடு, சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது. இன்றைய சூழலில் இந்தியாவுக்குத் தங்கத்தைவிட நன்னீரின் தேவையே அதிக அளவில் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தங்கத்தை விட மேலானது தண்ணீர்; நன்னீரை மாசுப்படுத்தாமல் காப்பதற்கு வல்லுநர் சொல்லும் யோசனைகள்!

முடிந்த வரை தண்ணீரை சேமிப்பதோடு, சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது. இன்றைய சூழலில் இந்தியாவுக்குத் தங்கத்தைவிட நன்னீரின் தேவையே அதிக அளவில் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Published:Updated:
குளம், கண்மாய்களில் சேகரிக்கப்படும் தண்ணீர்

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோரைக் கருத்தில் கொண்டு நாம் நீர்நிலைகளைப் பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்றியமையாத தேவைகளில் ஒன்றான குடிநீர்த் தேவையைப் போக்க அரசு இதுபோன்ற செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் மக்கள் எவ்விதம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் ஜெயஶ்ரீ வெங்கடேசனிடம் கேட்டோம்.

``நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி போன்ற ஓர் அரசியல் தலைவர் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. நீர் மேலாண்மையில் அரசின் செயல்திட்டங்கள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட பொதுமக்களின் பொறுப்புணர்வும் முக்கியமானது. ஆகவே, அரசையும் பொதுமக்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.

தண்ணீர் நிறைந்த ஏரி
தண்ணீர் நிறைந்த ஏரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது தடுக்க வேண்டுமெனில் தண்ணீர் குறித்து நிலவும் பார்வையிலேயே மாற்றம் வேண்டும். உலகில் உள்ள தண்ணீரில் 3 சதவிகிதம் மட்டுமே குடிப்பதற்கு உகந்த நன்னீர் உள்ளது. அந்த 3 சதவிகிதத்திலும் 1.5% பனிப்பாறைகளாக உறைந்து கிடக்கின்றன. ஆகவே மீதமுள்ள 1.5 சதவிகித நன்னீர்தான் நம் பயன்பாட்டுக்கு இருக்கிறது. நன்னீர் தீர்ந்தே விடாத அளவுக்கு இருப்பதாக நாம் நினைப்பதால்தான் அதை அதிகம் வீணடிக்கிறோம். தங்கத்தை எப்படிப் பாதுகாப்போமோ அது போலவே தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எவ்வளவு செலவழித்தாலும் மழை பெய்வதன் மூலம் நமக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என நினைக்கிறோம். இன்றைய பருவநிலை மாற்றத்தில் மழை பெய்யும் அளவு, காலம் என எல்லாமே மாறிவிட்டது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சமீப காலங்களில் மூன்றே நாள்களில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. பெய்கிற மழை நிலத்துக்குள் இறங்குவதற்கான வாய்ப்பில்லை. புல்வெளி, மண்தரை ஆகியவற்றின் பரப்பு குறைந்துவிட்டதால் நிலத்துக்குள் தண்ணீர் இறங்காமல் நேரே கடலில் சென்று கலந்துவிடுகிறது. நன்னீர் கடலில் கலக்க வேண்டும். அது ஓர் தடுப்புபோல் இருந்து கடல் நீர் நிலத்தடிக்குள் வராது பார்த்துக்கொள்ளும். ஆனால், பெய்கிற பெருமளவிலான மழை கடலில் கலப்பது நமது பயன்பாட்டுக்குத் தேவையான நன்னீர் பற்றாக்குறை ஏற்படக் காரணமாகிறது. நிலத்தடி நீர் உப்புக்கரிக்கக் காரணம் புவியில் நன்னீர் குறைவாக இருப்பதுதான்.

ஜெயஶ்ரீ வெங்கடேசன்
ஜெயஶ்ரீ வெங்கடேசன்

இப்படியான சூழலில், நன்னீரை அதிக அளவில் வீணடிக்கிறோம். நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துவிடுகிறோம். விவசாயம், தொழில்துறை என எல்லாவற்றிலும் தண்ணீர் அதிகம் செலவு செய்யப்படுகிறது. தொழில்துறைகளில் தண்ணீரை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை எந்த அளவுக்கு பின்பற்றப்படுகிறது எனத் தெரியவில்லை. பொதுமக்களுமே கூட பிடித்து வைத்து இரண்டு நாள்களான தண்ணீரை பழைய தண்ணீர் என கீழே கொட்டுவதைப் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீரை வீணாக்குவதைப் போல நீரை மாசுபடுத்தவும் செய்கிறோம். தொழிற்சாலைகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த நீர் மாசுபாட்டில் பங்கு இருக்கிறது. நீர் மாசுபாட்டின் காரணமாக நன்னீரைக்கூட பயன்படுத்த முடியாத சூழலுக்கு ஆளாகிறோம். இருக்கிற கொஞ்சம் தண்ணீரையும் பயன்படுத்தத் தகுதியற்றதாக்கும்போது நிச்சயம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்" என்றவர் நீரை சேமிக்கும் வழிமுறை குறித்துக் கூறினார்.

காவிரி நீர்
காவிரி நீர்

``நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு பல செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு அவற்றில் தண்ணீர் சேகரிக்கப்பட வேண்டும். முடிந்த வரை நீர் மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள் தண்ணீர் மறுசுழற்சிக்குட்படுத்தப் படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசின் நடவடிக்கைகள் ஒரு புறம் எனில், மக்களும் இதில் பங்கெடுக்க வேண்டும். முடிந்த வரை தண்ணீரை சேமிப்பதோடு, சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது. இன்றைய சூழலில் இந்தியாவுக்குத் தங்கத்தைவிட நன்னீரின் தேவையே அதிக அளவில் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று சொல்லி முடித்தார் ஜெயஶ்ரீ வெங்கடேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism