Published:Updated:

நீலகிரி: வேலிக்குள் தவித்த கடமான்கள், காட்டில் விடப்போகும் வனத்துறை... காத்திருக்கும் புது ஆபத்து?

ஊட்டி மான் பூங்கா

மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள், மான் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். ஆணைய விதிமுறைகள் படி இந்த பூங்காவில் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற தரமான சூழல் இல்லை.

நீலகிரி: வேலிக்குள் தவித்த கடமான்கள், காட்டில் விடப்போகும் வனத்துறை... காத்திருக்கும் புது ஆபத்து?

மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள், மான் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். ஆணைய விதிமுறைகள் படி இந்த பூங்காவில் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற தரமான சூழல் இல்லை.

Published:Updated:
ஊட்டி மான் பூங்கா

ஊட்டியில் செய்லபட்டுவந்த மான் பூங்கா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டாலும், வேலிகளுக்குள் தவிக்கும் மான்களை, வனத்தில் விடுவிப்பதில் வனத்துறை மெத்தனம் காட்டியே வந்தது. நீண்ட இழுபறிக்குப்பின் மான்களை விடுவிக்கும் பணி தற்போது தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்ல ஏரியின் மறு கரையில் மான் பூங்கா ஒன்று நிறுவப்பட்டு,1995-ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில், குறைக்கும் மான் [barking deer ], கடமான் [sambar deer ] உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டு வேலிகளுக்குள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

ஊட்டி மான் பூங்கா
ஊட்டி மான் பூங்கா

இந்தப் பூங்காவில் பராமரிக்கப்படும் மான்கள் அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகின. இதனைத் தொடர்ந்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் இந்த மான் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். ஆணைய விதிமுறைகள் படி இந்த பூங்காவில் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற தரமான சூழல் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் இங்கு 19 கடமான்கள் இருந்தன. தற்போது உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக அவற்றின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய உயிரியல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாத நிலையில், இங்குள்ள மான்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிக்கையை வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். ஆனால், இடமாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படாமலேயே இருந்தது. மேலும் மான்களை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கலாம் என அனுப்பப்பட்ட அறிக்கையின் மீதும் முதன்மை வனத்துறை அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தனர்.

ஊட்டி மான் பூங்கா
ஊட்டி மான் பூங்கா

பல ஆண்டுகளாக வேலிகளுக்குள் சிக்கித் தவித்துவந்த இந்த கடமான்களை, நீலகிரி வனப்பகுதியில் விடுவிக்க தற்போது முதன்மை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடமான்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் துவக்கி உள்ளது.

மான்கள் விடுவிப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், "இந்த கடமான்களை வண்டலூர் அல்லது திருச்சியில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்து அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினோம். ஆனால் ஊட்டியில் இருந்து திருச்சி அல்லது வண்டலூருக்கு மான்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றால், பயணத்தில் ஏற்படும் அச்சம் மற்றும் அழுத்தம் காரணமாக அவை வழியிலேயே இறந்து போகக்கூடும். அதனால், அவற்றை இடமாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படாமலேயே இருந்தது.

நீலகிரி: வேலிக்குள் தவித்த கடமான்கள், காட்டில் விடப்போகும் வனத்துறை... காத்திருக்கும் புது ஆபத்து?

பூங்காவில் உள்ள கடமான்களை ஒவ்வொன்றாக வனத்திற்குள் விடுவிக்க முதன்மை வனப் பாதுகாவலர் அனுமதி அளித்துள்ளார். அனைத்து மான்களையும் ஒரே நேரத்தில் பிடித்துச் செல்வதைத் தவிர்த்து ஒவ்வொன்றாக அவற்றைப் பிடித்து நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவிற்குள் விடுவிக்க உள்ளோம்" என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் மற்றும் கூடுகள் அமைப்பின் நிறுவனர் சிவதாஸ்," காட்டுயிர்களை அதன் வாழ்விடங்களில் இருப்பதே உகந்தது.இயற்கைக்கு மாறாக அவற்றை ‌கூண்டில் அடைத்து வேடிக்கை பொருளாக மாற்றுவதே தவறான ஒன்றுதான்.கூண்டு வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட எந்த விலங்கும்,பறவையும் காட்டில் ஒரு நாளைக்கூட இயல்பாக கழிக்க முடியாது.காரணம் இவை தனக்கான உணவைக்கூட தாமாக தேடி உண்டு பழக்கமற்றவை.

ஊட்டியில் பல ஆண்டுகளாக கூண்டிட அடைக்கப்பட்ட இந்த கடமான்களை வனத்தில் விட முடிவு செய்துள்ளது.ஆனால் இவை மிக எளிதாக வேட்டை விலங்குகளுக்கு இறையாகும்.மேலும் மனிதர்கள் இவற்றை வேட்டையாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.இவற்றால் வேகமாக ஓடக்கூடத்தெரியாது என்பதே வேதனையான உண்மை.இனி வரும் காலங்களிலாவது இது போன்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும்" என்றார்.

ஊட்டி மான் பூங்கா
ஊட்டி மான் பூங்கா

கடமான்களை பராமரிக்கும் பொறுப்பு அதிகாரியான முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கௌஷலிடம் பேசினோம்," இந்த விலங்குகளை வேறு உயிரியல் பூங்காவிற்கு மாற்ற‌ பல வழிமுறைகளை ஆலோசித்தோம்.இந்த சீதோஷ்ண நிலையில் பழகிய கடமான்களை வேறு எங்கும் வைத்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு ஆண்டுகாலமாக கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் ஒத்துழைப்பில்,இந்த கடமான்களை கண்காணித்து பிரத்தியேக பயிற்சி அளித்து பழக்கப்படுத்தியுள்ளோம்.முதல் கடமானை நேற்று கவர்னர் சோலை பகுதியில் விடுவித்தோம்.நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன.வனத்திலும்‌ முடிந்த வரை தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்றார்.