Published:Updated:

`சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி; அலட்சிய வனத்துறை!' - 17 மணி நேர கோத்தகிரி திக் திக் #SpotReport

 tiger rescue opration
tiger rescue opration

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் சிக்கி‌‌ நாள் முழுக்கப் போராடிய புலி, வனத்துறையின் தாமதத்தால் தானாக விடுவித்துக்கொண்டு‌ தப்பி ஓடியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விளை நிலத்திற்கும் இடையில் உள்ள புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் நேற்று அதிகாலை பயங்கர உருமல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட தோட்ட உரிமையாளர் சிறுத்தையாக இருக்கக்கூடும் என எண்ணி மிகுந்த ஜாக்கிரதையாக உருமல் சத்தம் கேட்கும் பகுதிக்குச் சென்றார். இவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போதே வேலியோரத்திலிருந்து பயங்கர உருமலுடன் இரண்டடி உயரத்திற்குப் புலி ஒன்று எகிறிகுதித்துள்ளது.

சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி
சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி

இதைக்கண்ட தோட்ட உரிமையாளர் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, புலி ஒன்று சுருக்கு வலையில் சிக்கி தப்பிக்க முடியாமல் இருப்பதைப் பார்த்தனர்.

உடனே வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் இந்த விவகாரத்தை தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை என மொத்த அரசு ஊழியர்களும் புலியை மீட்கக் களமிறங்கினர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்

புதர் மறைவில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில், வலதுபக்க முன்னங்கால் சிக்கி தப்பிக்க பல மணி நேரம் புலி போராடியதால் ஆக்ரோஷமாக இருந்தது. புலியைப் பார்க்க ஆர்வத்துடன் சுற்றுவட்டார மக்களும் குவிந்துவிட்டனர்.

கிணற்றில் சிக்கிய யானை.... இயற்பியல் விதியைக்கொண்டு மீட்ட வனத்துறை அதிகாரிகள்!

சுருக்கில் சிக்கியுள்ள புலியை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வனத்தில் விடுவிப்பதுதான் வனத்துறையினரின் திட்டமாக இருந்தது.

பொதுமக்கள்
பொதுமக்கள்

பரபரப்பாக மீட்பில் களமிறங்கிய ஊழியர்கள் பாதுகாப்பு உடையணிந்து புலியைத் தூக்க வலை, அடைக்கக் கூண்டு ஏற்றிச்செல்ல வாகனம் என எல்லாம் தயார் ஆகிவிட்டது. ஆனால் மயக்க ஊசி செலுத்த வனக் கால்நடை மருத்துவர் இல்லை. காலை 11 மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணி மருத்துவர் இல்லாமல் போகவே மாலை வரை நீண்டது. பின்னர், ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் மனோகரனை மாலை 4 மணிக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு மயக்க ஊசி செலுத்த துப்பாக்கி வந்து சேரவில்லை என மீண்டும் ஒரு மணி நேரம் காத்திருந்தனர்.

ஒரு வழியாக எல்லாம் தயார் செய்து துப்பாக்கியுடன் பதுங்கிப் பதுங்கி அருகில் சென்றனர். ஆனால், புலியைக் காணவில்லை அதிர்ச்சியில் உறைந்த குழுவினர் அமைதியாக திரும்பிவந்து மீண்டும் புலியைத் தேடத் தொடங்கினர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

மீட்புப் பணிக்கு இவர்கள் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், புலி தானாகவே சுருக்கிலிருந்து விடுவித்துக்கொண்டு சோர்வில் அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் படுத்துக்கொண்டது. பின்னர் முதுமலை கள இயக்குநரின் அறிவுறைப்படி மரத்தின் மீதிருந்து புதருக்குள் கற்களை வீசச்செய்தார். அப்போதும் புலி வெளியே வரவில்லை.

`அந்த ஒற்றைப் புலி எப்போது வரும் எனத் தெரியவில்லை!' -ஆடு, மாடு வேட்டையால் கதிகலங்கும் கூடலூர் மக்கள்

இருட்டத்தொடங்கியது. இனி புலியைப் பிடிக்க வாய்ப்பில்லை என அனைவரும் கிளம்பிவிட்டு புலியைக் கண்காணிக்க ஒரு குழுவை மட்டும்‌ நியமித்தனர். தேயிலைத் தோட்டத்தில் சோர்ந்த நிலையில் படுத்திருந்த புலி, இன்று அதிகாலை 3 மணியளவில் மெதுவாக நடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

சுருக்குக் கம்பி
சுருக்குக் கம்பி

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ``இந்த புலியைப் பிடிக்காதது நல்லதுதான் சார். ஏன்னா இத புடிச்சி ட்ரீட்மென்ட் குடுத்து முதுமலையில விடவேண்டிவரும். அங்க இருக்கிற புலிகளோட டெரிட்டடெரி ப்ராப்ளம் வரும். ப்ளஸ் இங்க இதோட வாழிடமும் பாதிக்கும். இந்த ஏரியால் புலியால எந்தத் தொந்தரவும் இல்ல. மக்களும், கால்நடையும் பாதிக்காம பாத்துக்குறோம் சார்" என்றார்.

புலியைக் கோட்டை விட்ட விவகாரம் குறித்து ஊட்டியைச் சேர்ந்த சுரேஸ் பேசுகையில் " உரிய நேரத்தில் முயற்சி செய்திருந்தால் புலியை மீட்டு சிகிச்சை அளித்து ரேடியோ காலர் பொருத்தி வனத்திற்குள் விடுவித்திருக்கலாம். இவ்வளவு பெரிய வனப்பரப்புள்ள பகுதியில் ஒரு வனக்கால்நடை மருத்துவர்கூட இல்லை என்பது வேதனையானது.

snare
snare

ஒருவேளை தப்பித்த புலி உடலில் காயங்களுடன் சென்றிருந்தால் இறக்கும் அல்லது ஆட்கொல்லியாக மாறும் இரண்டிற்கும் வாய்ப்பு உள்ளது. சட்டவிரோத சுருக்கு வலைகள் வைக்கும் நபர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு