Published:Updated:

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் குப்பைகள்; பயோமைனிங் திட்டம் பயன் தருமா, பாதிப்பை ஏற்படுத்துமா?

பயோமைனிங் திட்டம்

பள்ளிக்கரணை போன்ற திறந்த வெளி நிலங்களில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுவரை கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் விதமாக பயோமைனிங் திட்டம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் குப்பைகள்; பயோமைனிங் திட்டம் பயன் தருமா, பாதிப்பை ஏற்படுத்துமா?

பள்ளிக்கரணை போன்ற திறந்த வெளி நிலங்களில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுவரை கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் விதமாக பயோமைனிங் திட்டம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

Published:Updated:
பயோமைனிங் திட்டம்

சென்னை மாநகரில் உருவாகும் அனைத்து கழிவுகளும் முறையாக அகற்றப்படாமல் பள்ளிக்கரணை, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படுகிறது. இதனால் டன் கணக்கில் குப்பைககள் சேர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதைச் சரிசெய்யும் முயற்சியாக குப்பைகளிலுருந்து மின்சாரம் எடுக்கும் பயோ மைனிங் திட்டம் கோயம்புத்தூர், சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருப்பதாக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். பயோ மைனிங் திட்டத்தின் செயல்முறை என்ன? இந்தத் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் போன்ற கேள்விகளை முன்வைத்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், எழுத்தாளருமான ஜியோடாமினிடம் பேசினோம்.

ஜியோ டாமின்
ஜியோ டாமின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாடுகளில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, ஆழமாகக் குழி தோண்டி அடியில் கான்கிரீட் தளம் அமைத்து மறுசுழற்சி செய்ய முடியாத மிகவும் ஆபத்தான குப்பைகளை அந்தக் குழிக்குள் போட்டு, குழியை ஒரு பிளாஸ்டிக் லேயர் கொண்டு மூடி விடுவார்கள். இந்தக் குப்பைகளில் விஷ வாயுக்கள் வெளியேறாமல் கட்டுப்படுத்த குழாய்கள் அமைக்கப் பட்டிருக்கும். இந்த மாதிரியான திட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதில்லை. இங்கு பள்ளிக்கரணை போன்ற திறந்த வெளிகளில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுவரை கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் விதமாக பயோமைனிங் திட்டம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயோ மைனிங் திட்டம் என்றால், குப்பைக்கிடங்குகளில் உள்ள மக்கும் குப்பைகளையும் மக்கா குப்பைகளையும் பிரித்தெடுப்பார்கள். அதில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம். மக்கா குப்பைகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தலாம் அல்லது அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் என்னவென்று பார்த்தால், குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பையைப் பிரிப்பது சாத்தியமற்றது. மக்கும் குப்பகளுடன் சேர்ந்து கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளோ, பாட்டில்களோ வெயிலால் நொறுங்கி துகள்களாக மக்கும் குப்பையுடன் கலந்திருக்கும். அதனால் மக்கும் குப்பையைப் பிரித்து இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியாது.

குப்பையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்
குப்பையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

மக்கா குப்பைகளான பிளாஸ்டிக், பெயின்ட் வாளி, நறுமணப்பொருள்கள் உள்ளிட்டவை மறுசுழற்சி செய்வது, அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது சூழலியல் சார்ந்த முயற்சி என்று சிலர் எண்ணுகின்றனர். இந்தப் பார்வை தவறானது. பிளாஸ்டிக் என்பது நிலக்கரியைவிட அதிகமாக சூழலை மாசுபடுத்தும். அப்படியிருக்கையில் பிளாஸ்டிக்கில் மின்சாரம் தயாரிப்பது காற்றை அதிகமாக மாசுபடுத்தும்.

பயோமைனிங் மூலம் மறு சுழற்சி செய்யப்படாத நெகிழிக்கழிவு குப்பைகளை மாத்திரைகளாக (Refused Derived fuel) ஆக்கப்பட்டு சாம்பலாக்கிகளாக, சிமென்ட் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்த உள்ளனர். இதனால் சூழலுக்கும் கேடு, அதைப் பயன்படுத்தும் தொழிலாளர்களின் உடல்நலத்துக்கும் கேடு விளைவிக்கும்.

பயோமைனிங் திட்டம் என்பது அதிக செலவு பிடிக்கும் திட்டம். இதுவரை சேர்ந்த கழிவுகளை இந்தத் திட்டத்தின் மூலம் அப்புறப்படுத்திவிட்டு இனி கழிவுகள் அதிக அளவில் சேராமல் பார்த்துக்கொண்டால் இந்தத் திட்டமானது ஓரளவு வரவேற்கத்தக்கது. இதே போல் தொடர்ந்து கழிவுகளை அதிகமாக உருவாக்கிக்கொண்டே இருந்தால் அது சூழலுக்கும் மாநில நிதிக்கும் சுமையாகிவிடும்.

தாம்பரம் குப்பை மேடு
தாம்பரம் குப்பை மேடு

குப்பைகளை அகற்றும் பிரச்னையாக இதைப் பார்க்காமல், உற்பத்தி பிரச்னையாகப் பார்க்க வேண்டும். குப்பைகளை அதிக அளவில் உருவாக்காமல் குறைப்பதுதான் நல்லது. ஒரே முறை பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனிகளும், அலைபேசி போன்ற இ-வேஸ்டுகளைத் தயாரிக்கும் கம்பெனிகளும் தாங்கள் உருவாகும் குப்பையை தாங்களே பொறுப்பேற்கும் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால் அதிக அளவிலான குப்பைகள் அகற்றும் சுமை குறையும். பெருநிறுவனங்களும் தாங்களே குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதால் குறைந்தளவு உற்பத்தி செய்யலாம். மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பாட்டில்கள், பைகளை உற்பத்தி செய்யலாம். தேவையான பொருள்களை மட்டும் உற்பத்தி செய்வதால் தேவையற்ற குப்பைகள் குறையும். இப்போது குப்பைகளை அகற்றுவது எளிதாகிவிடும்'' என்கிறார் ஜியோ டாமின்.