Published:Updated:

ஊழிக்காலம் - 25: காலநிலை மாற்றமும் ஒரு பேரிடர்தான்! இறுதி யுத்தத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

காலநிலை அவசரம்
News
காலநிலை அவசரம்

இனிவரும் காலகட்டங்களில் தலைப்புச் செய்தி - தலையங்கம் - வானிலை அறிக்கை - விளையாட்டுச் செய்திகள் என்ற வரிசையில் காலநிலைச் செய்திகளும் முக்கிய இடம்பிடிக்கும்.

மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளாவிய மழை அளவுகள் மாறியிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலையை ஜூன் மாதத்தில் அமெரிக்கா சந்தித்திருக்கிறது.

கனடாவை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கும் அதீத வெப்பத்துக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு - வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கலாம்.

சென்ற வாரக் கட்டுரையை எழுதி முடித்தபிறகு வெளிவந்திருக்கும் காலநிலை ஆய்வு முடிவுகள் இவை. இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பி, அது பிரசுரமாவதற்குள் புதிய செய்திகள் வரலாம். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை அவ்வளவு மோசமாக இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் வாழ்ந்து வந்திருக்கிறது. பெரும் போர்களை, பஞ்சங்களை, வெள்ளங்களை, அணு ஆயுதங்களை, பெருந்தொற்றுக்களைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் பிரமாண்ட நிகழ்வு இந்த காலநிலை மாற்றம்.

இனிவரும் காலகட்டங்களில் தலைப்புச் செய்தி - தலையங்கம் - வானிலை அறிக்கை - விளையாட்டுச் செய்திகள் என்ற வரிசையில் காலநிலைச் செய்திகளும் முக்கிய இடம்பிடிக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

ஊழிக்காலம் என்று நம் கற்பனைக்குள் விரிகிற எல்லாமே சுனாமி, அணுகுண்டு வெடிப்பு, நிலநடுக்கம் போன்ற திடீர் நிகழ்வுகளாக இருப்பதால் காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் நம் கவனத்துக்கு வருவதில்லை என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு நாளும் முன்னேறி, தீவிரமடைந்து, நம் நவீன நாகரிகத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பிரஷர் குக்கர் என்பதாகக் கூட இதைக் கற்பனை செய்ய முடியாது. ஏனென்றால் அழுத்தம் அதிகமாகி வெடிக்கும் ஒற்றை நிகழ்வு என்பது இங்கே கிடையாது. ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் கூட்டு விளைவு நம் எதிர்காலத்தையே மாற்றியமைப்பதாக இருக்கும். பெரிதாக எதுவும் மாறவில்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே நாம் சென்று சேரும் எதிர்காலம் வேறு மாதிரியானதாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகுவது, போரியல் வகைக் காடுகளின் இடமாற்றம், நிரந்தர உறைபனி உருகுவது, அட்லாண்டிக் கடல் சுழற்சியின் சீர்குலைவு, மேற்கு அண்டார்ட்டிக்கின் பனிப்பாறைகள் உருகுவது, அமேசான் காடுகள் அழிவது, இந்திய பருவமழையில் ஏற்படும் மாற்றம், மேற்கு ஆப்பிரிக்கப் பருவமழையில் ஏற்படும் மாற்றம், பவளப்பாறைகள் அழிவது ஆகிய ஒன்பது நிகழ்வுகள் Tipping points என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட துப்பாக்கியில் ட்ரிக்கரை அழுத்துவதுபோல. இந்த நிகழ்வுகள் நடந்துவிட்டால் காலநிலை சீர்குலைவை யாராலும் தடுக்க முடியாது என்பது அறிவியலாளர்களின் கணிப்பு. அதற்குப் பிறகான உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காலநிலை மாற்றம் என்பது இன்றைக்கு வந்த புது பிரச்சனை அல்ல. 1974ல் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பருவகாலம் சீர்குலைவதால் வரப்போகும் அரசியல் பிரச்னைகளையும் இடப்பெயர்வுகளையும் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அறிவியல் உலகத்தின் தரவுகளை நிராகரித்த உலக நாடுகள், சூழல் பேரிடர்கள் வந்து கழுத்தை நெருக்கத் தொடங்கியவுடன் காலநிலை மாற்றம் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கின்றன. காலநிலை வல்லுநர்களின் ஆராய்ச்சிக்குப் போதுமான நேரமும் நிதி ஒதுக்கீடும் தரப்பட்டிருக்கவேண்டும் என்பதே வரலாறு நமக்குத் தரும் பாடம்.

Oil Rig
Oil Rig
இப்போது பல செயற்பாட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்குமே எண்ணெய் நிறுவன லாபி பற்றித் தெரிந்திருக்கிறது. அரசுகளுக்கும் இது தெரியும் என்றாலும் அந்த லாபியிலிருந்து அவற்றால் விடுபட முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. அது அரசியல் கேள்வி மட்டுமல்ல - மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கேள்வி.

பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்துவிட்டன, பருவமழை குளறுபடியானதாக மாறத் தொடங்கிவிட்டது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்த நிலையில் மட்டுமே இருந்த பனிகூட உருகத் தொடங்கிவிட்டது. ஆனால் அதனால் கலங்கத் தேவையில்லை. நம்மிடம் இதை எதிர்கொள்ள ஆயுதங்கள் உண்டு. "அவற்றில் முக்கியமான மேஜிக் ஆயுதம் அறிவியல்" என்கிறார் எழுத்தாளர் ஆலிஸ் பெல். அரசியலின் நிழல் இல்லாத அறிவியலை அவர் குறிப்பிடுகிறார் என்றே புரிந்துகொள்கிறேன். இத்தனை கரிம உமிழ்வுகளை மட்டும் வெளியிடலாம் என்று அறிவியலாளர்கள் சொன்னால், அதை அப்படியே அரசியலின்றி செயல்படுத்தும் நாடுகள் இப்போதைய அவசரத் தேவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு பெருந்தொற்றுக்காலத்தில் இந்தத் தொடர் வெளிவந்திருக்கிறது. ஆனால், பெருந்தொற்று முடிந்தபின்னும் பெரிய பிரச்னையாகக் காலநிலை மாற்றம் நம்மைத் தொடர்ந்து அச்சுறுத்தப்போகிறது. சும்மா பீதியூட்டுவதில் அர்த்தமில்லை என்று அச்சுறுத்தல்களை மென்மையான மொழியில் எழுதினால்கூட, அதுவே ஆபத்தான ஓர் எதிர்காலமாகத்தான் தெரிகிறது. நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதே உண்மை.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தை யாராலும் தனியாக எதிர்கொள்ள முடியாது. நம் அனைவரையும் விட பெரிதான பிரமாண்ட அச்சுறுத்தல் அது. அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியப்படும். நாம் ஒன்றிணைய வேண்டுமானால் பல உலக நாடுகள் தங்கள் தனிப்பட்ட அஜெண்டாக்களைத் தள்ளிவைத்துவிட்டு ஒத்துழைக்க முன்வரவேண்டும். காலநிலை செயல்பாடுகளில் ஆங்காங்கு நாம் சொதப்பினாலும் இறுதியில் மனித இனமாக நாம் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்கள், மானுடவியலாளர்கள், காலநிலை வல்லுநர்களின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் அந்த வெற்றியில்தான் நம் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.

தொடர்ந்து சண்டையிட்டு தளர்ந்துபோயிருக்கும் கதாநாயகன், தன் சக்தியை எல்லாம் திரட்டி, ஆழ்ந்த பெருமூச்சு விட்டு இறுதி முயற்சியாக ஒரே ஒரு நாக் அவுட் பஞ்ச்சை வில்லனுக்குத் தரும் காட்சியைப் பல படங்களில் பார்த்திருப்போம்.

வரலாற்று ரீதியாக அப்படி ஒரு புள்ளியில் நின்றுகொண்டிருக்கிறோம்.

- கட்டுரைத் தொடர் மட்டுமே முடிவடைந்திருக்கிறது, செயல்பாடுகள் இல்லாவிட்டால் ஊழிக்காலம் தொடரும்.