Published:Updated:

`5 ஆண்டுகளில் அரசு அனுமதியுடன் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டன!' - மத்திய அமைச்சர் தகவல்

கலிலுல்லா.ச

நாடு முழுவதும் வளர்சிக்காக 1 கோடி மரங்களை வெட்ட அரசு அனுமதி அளித்துள்ளது என்று மத்திய சுற்றச்சூழல்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

பாபுல் சுப்ரியோ
பாபுல் சுப்ரியோ

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பாபுல், ``2014- 2019-ம் ஆண்டுகளில் நாடுமுழுவதும் வளர்ச்சிக்காக 1.09 கோடி மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டுகளில் மட்டும் 26.91 லட்சம் வேரோடு பிடிங்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயால் அழிந்த மரங்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

காடு
காடு

பல்வேறு சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப திறமையான அதிகாரிகளின் அனுமதியுடன் மரங்கள் பல்வேறு வளர்ச்சி நோக்கங்களுக்காக வெட்டப்படுகின்றன. இருப்பினும், காட்டுத் தீ காரணமாக மரங்களை வெட்டுவது தொடர்பான தகவல்களை அமைச்சகம் பராமரிக்கவில்லை" என்று சுப்ரியோ கூறினார்.

மேலும், ''அமைச்சகம் சேகரித்த தகவலின் படி, 2014-15-ம் ஆண்டுகளில் 23.3 லட்சம் மரங்களும், 2015-16 ஆண்டுகளில் 16.9 லட்சம் மரங்களும், 2016-17 ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும் 2017 -18 ம் ஆண்டுகளில் 25.5லட்சம் மரங்களும் வெட்டபட்டுள்ளன'' என்றார்.

காடுகள்
காடுகள்

``12 மாநிலங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில், காடு வளர்ப்பு திட்டங்களுக்காக 237.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல 56,319 குடும்பங்களுக்கு சோலார் போன்ற மாற்று ஆற்றல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.