Published:Updated:

`என் ரோல்மாடலைச் சந்தித்துவிட்டேன்!'- ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த கிரெட்டா - மலாலா சந்திப்பு

மலாலா, கிரெட்டா சந்திப்பு
மலாலா, கிரெட்டா சந்திப்பு

``இன்று நான் என்னுடைய ரோல் மாடலைச் சந்தித்துவிட்டேன். வேறு என்ன சொல்வது!" என்று மகிழ்ச்சியில் கிரெட்டா ட்வீட் செய்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடிக்கொண்டிருப்பவர் கிரெட்டா தன்பெர்க். பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடிக்கொண்டிருப்பவர் மலாலா யூசுஃப்சாய். இருவரும் முதன்முறையாகச் சந்தித்தபோதே, நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர்.

Greta Thunberg
Greta Thunberg
Eduardo Munoz Alvarez

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மலாலா யூசுஃப்சாய். இங்கிலாந்தில் இந்த வாரம் நடக்கவுள்ள பள்ளிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்காக அங்கு சென்றுள்ளார் சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க். இங்கிலாந்து சென்ற கிரெட்டா, தன்னுடைய ரோல் மாடலான மலாலாவை ஆக்ஸ்ஃபோர்டுக்குச் சென்று நேரில் சந்தித்துள்ளார்.

``இன்று நான் என்னுடைய ரோல் மாடலைச் சந்தித்துவிட்டேன். வேறு என்ன சொல்வது!" என்று மகிழ்ச்சியில் கிரெட்டா ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு மலாலாவும், ``நான் வகுப்புகளைக் கைவிட்டு வெளியே வருகிறேன் என்றால், அது இந்தத் தோழிக்காக மட்டும்தான்" என்று கூறியுள்ளார். இரண்டு இளம் போராளிகளும் இளம் வயதிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் பேசியுள்ளனர். அதேநேரம், அமைதிக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். மலாலா 2014-ம் ஆண்டில், கிரெட்டா இப்போதுள்ள இதே 17 வயதின்போது அதைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலாலாவைச் சந்தித்த கிரெட்டா
மலாலாவைச் சந்தித்த கிரெட்டா

இருவரும் இளம் வயதிலேயே சர்வதேச அளவில் மக்களை ஒருங்கிணைத்து சாதனை படைத்துள்ளனர். சமீபத்திய ஒரு பேட்டியில் கிரெட்டாவையும் துப்பாக்கிச்சூட்டில் தப்பிப் பிழைத்து தற்போது அதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் எம்மா கொன்ஸாலெஸையும் மிகவும் புகழ்ந்து பேசினார். மலாலாவின் போராட்டங்களால் ஊக்குவிக்கப்பட்டு, களத்தில் இறங்கியவர் கிரெட்டா தன்பெர்க். இப்போது அத்தகையவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் தான் பெருமகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார் கிரெட்டா துன்பெர்க்.

அடுத்த கட்டுரைக்கு