Published:Updated:

சென்னையின் கழிவுநீர் எப்படிச் சுத்திகரிக்கப்படுகிறது? ஒரு ஸ்பாட் விசிட் #VikatanPhotoStory

இ.லோகேஷ்வரி
தே.அசோக்குமார்

சென்னை நெசப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கும் போட்டோ ஸ்டோரி.

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை

''சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

கழிவுநீர்
கழிவுநீர்
Vikatan

அதேபோன்று, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்'' என்று சட்டசபையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இந்தக் கழிவுநீர் எப்படிச் சுத்திகரிக்கப்படுகிறது? ஒரு ஸ்பாட் விசிட்.

மூன்றாம் கட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை குடிநீராகப் பயன்படுத்தலாம். இதுவரை தமிழகத்தில் இரண்டுகட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீர், அருகிலுள்ள ஆறுகளில் விடப்படுகிறது. இதனால், நிலத்தடிநீர்மட்டம் உயரும்.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்
Vikatan

சென்னையில் நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நெசப்பாக்கம், கோயம்பேடு, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இயற்கை முறையில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

நெசப்பாக்கம்
நெசப்பாக்கம்
Vikatan

முதற்பகுதி: வடிகட்டுதல் முறையில் பெருங்குப்பைகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, மணற்துகள்கள் நீக்கப்பட்டு, கழிவுநீர் மட்டும் அடுத்தகட்ட சுத்திகரிப்புக்குச் செல்லும்.

Process 1
Process 1
Vikatan

செட்லிங்: இயற்கை முறையில் பெரிய நீர்நிலைகளில் கழிவுநீரை சேமித்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதற்கடுத்து, காற்றை உட்புகுத்தி சுத்திகரிக்கப்படுகிறது. 'ஏரேஷன்' முறையில் நுண்ணுயிர்களால் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

Aeration Process
Aeration Process
Vikatan

மீண்டும் இயற்கை முறையில், தொட்டிகளில் நீர்சேகரித்து சுத்திகரிக்கப்படும். இங்குதான் கழிவுநீரின் நிறம் மாறி, நன்னீரின் நிறத்துக்கு மாறுகிறது.

நிறம் மாறும் கழிவுநீர்
நிறம் மாறும் கழிவுநீர்
Vikatan

நன்னீர் போன்று காட்சியளிக்கும் நீரில், குளோரின் கலக்கப்படுகிறது.

Clorine Adding point
Clorine Adding point
Vikatan

கழிவுநீர் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, இந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது.

Processed seawage water
Processed seawage water
Vikatan

சென்னையில் மட்டும் தினமும் 500 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் கொடுக்கப்படுகிறது.

Treatmented seawage  water
Treatmented seawage water
Vikatan