Published:Updated:

ஆவின் பால்: பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு மாற்றாகக் கண்ணாடி பாட்டில் சாத்தியமா? 

ஆவின்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு பாட்டிலைத் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆவின் பால்: பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு மாற்றாகக் கண்ணாடி பாட்டில் சாத்தியமா? 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு பாட்டிலைத் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
ஆவின்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் வழங்குவதற்கு மாற்றாகக் கண்ணாடி பாட்டில்களில் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருக்கிறது. சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்தான் என்றாலும், அதன் மாற்று குறித்த நடைமுறை சாத்தியங்களை ஆராய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஆவின்
ஆவின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயன்படுத்திய பால் பாக்கெட்டுகளைக் கழுவி மீண்டும் ஆவின் அங்காடியிலேயே ஒப்படைத்தால் பாக்கெட் ஒன்றுக்கு 10 பைசா வழங்கப்படும் என ஆவின் அறிவித்திருந்தது. அது தற்போது நடைமுறையில் இருந்தாலும் மக்கள் பெரிய அளவில் அதைச் செயல்படுத்துவதில்லை. ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 40 லட்சம் பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் நிலையில் அவையனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளாக மாறுகின்றன. இச்சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படிப் பார்க்கலாம் என நம்ம ஊரு அமைப்பைச் சேர்ந்த நடராஜனிடம் கேட்டோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆவின் அங்காடிகளில் பால் பாக்கெட்டைத் திருப்பிக் கொடுத்தால் பாக்கெட் ஒன்றுக்கு 10 பைசா கொடுக்கப்படும் என்பது பல காலமாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் முன்பு பால் பாக்கெட்டைச் சேகரித்து ஒட்டுமொத்தமாகக் கொடுத்து பணம் பெற்றனர். தற்போது அந்த சொற்பத்தொகைக்காகப் பெரும்பாலானவர்கள் அதைச் சேகரித்து திரும்ப வழங்காமல் குப்பையில் வீசி விடுகின்றனர். இதற்கு மாற்றாகக் கண்ணாடி பாட்டில்களில் பால் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருப்பது சரிதான் என்றாலும், அதை சாத்தியப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் பார்க்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும்போது பாலின் விலை அதிகரிக்கும். அதைத்தாண்டி அதை விநியோகிக்கும்போது நிறைய பாட்டில்கள் உடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பாட்டிலைப் பயன்படுத்தி விட்டு அதைத் தூக்கி வீசுவதிலும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன.

நடராஜன்
நடராஜன்

கண்ணாடி பாட்டில்களைப் போலவே பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் டெட்ரோ பாக்கெட் ஆகியவற்றையும் மாற்றாக முன்வைக்க முடியும். கனமான பிளாஸ்டிக் பாட்டில்களில் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டரில் பால் விற்பனை செய்யலாம். பால் விலையைவிட 5 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யலாம். அந்த பாட்டிலைத் திரும்பக் கொடுத்து விட்டு 5 ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தால் நிறைய பாட்டில்கள் மறுசுழற்சிக்கு வரும். 10 பாட்டில்களை ஒன்று சேர்த்துக் கொடுத்தால் 50 ரூபாய் கிடைக்கும் என்றால் மக்கள் தாராளமாக அதைச் செய்வர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெட்ரா பாக்கெட்டும் மறுசுழற்சி செய்யப்படக்கூடியது. டெட்ரா பாக்கெட்டுகளை வைத்து ஃபர்னிச்சர்கள் செய்கிறார்கள். ஒரு பள்ளியில் டெட்ரா பாக்கெட்டைக் கொண்டு சேர், பெஞ்ச் உள்ளிட்டவற்றை செய்திருக்கிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு சொன்னது போலவே டெட்ரா பாக்கெட்டைத் திரும்பக் கொடுத்து பணம் வாங்கிக் கொள்கிற முறையை அறிமுகப்படுத்தலாம். டெட்ரா பாக்கெட்டை மறுசுழற்சி செய்து உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கலாம்.

பிளாஸ்டிக் தரம் பிரித்தல்
பிளாஸ்டிக் தரம் பிரித்தல்

பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் டெட்ரோ பாக்கெட் ஆகியவையும் பிளாஸ்டிக்தான் என்றாலும் Lesser evil என்று சொல்வதைப் போல நடைமுறைச் சாத்தியங்களுக்குட்பட்டு பாதிப்பு குறைந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில், டெட்ரா பாக்கெட் ஆகிய மூன்றையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். குப்பைக்குச் செல்லாமல் திரும்ப பால் நிறுவனத்தின் கைக்கே கொண்டு வருவதற்கும், விநியோகிப்பதற்கு சுலபமானதும், மறுசுழற்சி செய்வதன் சாத்தியங்களையும் உள்ளடக்கியது எது என ஆராய்ந்தால் தீர்வு கிடைத்துவிடும்" என்கிறார் நடராஜன்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு பாட்டிலைத் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism