Published:Updated:

தரிசு நிலங்களை வளப்படுத்துவது சரியல்ல... சூழலியலாளர்கள் எதிர்ப்பு!

Modi
Modi ( UNCCD CoP 14 )

இயற்கையான தரிசு நிலங்கள் மற்றும் காட்டு நிலங்கள் அதன் இயல்பிலேயே இருப்பதுதான் சரியென்று பல சூழலியலாளர்கள் இந்த இலக்கை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், ``போன் சேலஞ்ச் (Bonn Challenge)" என்ற பெயரில் தொடங்கிய உலக நாடுகளின் முன்னெடுப்பில் இந்தியாவுடன் இணைந்தது. 2020-ம் ஆண்டுக்குள் 150 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலமும் 2030-ம் ஆண்டுக்குள் 350 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலமும் வளப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தச் சவாலின் சாராம்சம்.

தரிசு நிலங்களை மீட்டெடுக்கும் திட்டத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 21 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுப்பதாக இந்தியா திட்டமிட்டிருந்தது. அந்த இலக்கை 26 மில்லியன் ஹெக்டேர்களாக நாங்கள் அதிகரிக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி
Arid Land
Arid Land
Pixabay

அதில், 2020-ம் ஆண்டுக்குள் 13 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் 2030-க்குள் மேலும் 8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் வளமைப்படுத்தப் போவதாக இந்தியா, ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உறுதியளித்தது. இந்தியாவின் இந்த உறுதிமொழிதான் ஆசியாவிலேயே மிகவும் அதிகம்.

இதுகுறித்து, நேற்று கிரேடர் நொய்டாவில் பேசிய பிரதமர், 21 மில்லியன் ஹெக்டேராக இருந்த இலக்கை, 26 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்திருப்பதாக அறிவித்தார்.

தரிசாகிக் கிடக்கும் விவசாய நிலங்களை மீட்டெடுத்தல், காட்டு நிலங்கள், மற்ற தரிசு நிலங்களை மீட்டெடுப்பதன் மூலம் இந்த இலக்கை அடையப்போவதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசு மொத்த இலக்கில் 10 சதவிகிதத்தை அதிகரித்துள்ளது.

Modi
Modi
UNCCD CoP 14

இயற்கையான தரிசு நிலங்கள் மற்றும் காட்டு நிலங்கள் அதன் இயல்பிலேயே இருப்பதுதான் சரியென்றும் அதிகமாக மாற்றிக் காட்ட வேண்டுமென்பதற்காக நிலத்தின் இயல்புத் தன்மையை மாற்றியமைப்பது சரியான தீர்வாகாது என்று பல சூழலியலாளர்கள் இந்த இலக்கை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

கண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் - `நிலவை நிச்சயம் தொடுவோம்’ என ஆறுதல் சொன்ன மோடி
அடுத்த கட்டுரைக்கு