Published:Updated:

ஜார்க்கண்ட்டில் மரம் வளர்த்தால் 5 யூனிட் இலவச மின்சாரம்..!தமிழகத்தில் சாத்தியமா?

மரம் வளர்ப்பு

மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பதைவிட பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் இருப்பதே நல்லது. ஒரு பெரிய மரம் வளர 50 வருடங்கள் வரை ஆகின்றன. மரத்தை வெட்டிவிட்டு அதற்கு பதில் 10 மரங்களை நடுவதாகச் சொல்கிறார்கள். அந்த 10 மரங்களும் வளருமா என்பது கேள்விக்குறி.

ஜார்க்கண்ட்டில் மரம் வளர்த்தால் 5 யூனிட் இலவச மின்சாரம்..!தமிழகத்தில் சாத்தியமா?

மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பதைவிட பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் இருப்பதே நல்லது. ஒரு பெரிய மரம் வளர 50 வருடங்கள் வரை ஆகின்றன. மரத்தை வெட்டிவிட்டு அதற்கு பதில் 10 மரங்களை நடுவதாகச் சொல்கிறார்கள். அந்த 10 மரங்களும் வளருமா என்பது கேள்விக்குறி.

Published:Updated:
மரம் வளர்ப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் தங்களுடைய வீட்டு வளாகங்களில் வளர்க்கும் ஒவ்வொரு மரங்களுக்கும் 5 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜார்க்கண்டில் நடைபெற்ற 73-வது வன மஹோத்சவ நிகழ்ச்சியில் பேசிய அவர், ``ஜார்க்கண்ட் மாநிலத்தில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்திய வனஆய்வு தரவுகளின்படி ஜார்க்கண்ட்டில் மரங்களின் பரப்பளவு 10 ஆண்டுகளில் 47 சதுர கிலோமீட்டர் அளவு குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மரங்கள்
மரங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

FSI-யின் அறிவிக்கையின்படி 2011-ல் 2,914 என்ற சதுர கிலோ மீட்டர் அளவில் இருந்த மரங்களின் பரப்பளவு, 2021-ல் 2,867 சதுர கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. நகர்ப்புறங்கள் முற்றிலும் கான்கிரீட் மயமாவதைக் குறைக்கும் வகையில், ஒவ்வொருவரின் தனி வீட்டு வளாகங்களில் நட்டு பராமரிக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மரம் வளர்ப்பவர்கள் சரியான நல்ல நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் இது இயற்கையைப் பாதுகாக்க உதவும். இதன் மூலம் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் பசுமை பரப்பை மேம்படுத்தவும், மரம்நடும் பணியில் ஒவ்வொரு தனி நபரையும் ஈடுபடுத்தும் நோக்கிலும் இந்த சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைத் தமிழகத்தில் அறிவிக்கலாமா என்பது குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரனிடம் பேசினோம், ``தமிழகத்தில் மரங்களை வளர்த்து பராமரிக்க மக்களுக்கு இது போன்ற சலுகைகளை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், தமிழக மக்கள் மரம் வளர்ப்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பதன் அவசியம், மற்றும் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ளனர்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மேலும், மக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி மரம் நட ஊக்குவிக்கப்படுகின்றன. மக்கள் அதிகம் வசிக்கும் நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பள்ளி வளாகங்கள், கல்லூரி வளாகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் முக்கிய தினங்கள் மற்றும் நிகழ்வுகளில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்குள் தமிழக அரசின் சார்பில் 32 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது" என்றார்.

சென்னையின் இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்து வரும் பேராசிரியர் முருகவேளிடம் பேசினோம். ``மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பதைவிட பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் இருப்பதே நல்லது. ஒரு பெரிய மரம் வளர்ந்து நிற்க 50 வருடங்கள் வரை ஆகின்றன. ஆனால், எளிதாக ஒரு பெரிய மரத்தை வெட்டிவிட்டு அந்த ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்களை நடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்த 10 மரங்களும் வளருமா என்பது கேள்விக்குறி. எனவே, புதிதாக மரம் நடுவது ஒருபுறம் இருப்பினும், இந்தப் பெருநகர வளர்ச்சி திட்டங்களான மெட்ரோ ரயில், பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றுக்கு மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

டாக்டர் த. முருகவேள்
டாக்டர் த. முருகவேள்

ஒரு மரம் பல பல்லுயிர்களுக்கு வாழ்விடமாக உள்ளது. சென்னையின் தியாகராய நகர் பகுதிகளில் உள்ள தூங்குமூஞ்சி என்ற அயல்நாட்டு மரங்களில் பச்சைக்கிளிகள் அதிக அளவில் கூட்டுகட்டி இருக்கின்றன. எனவே, நகரங்களில் உள்ள இயற்கை சூழலை பாதுகாக்க பெரிய மரங்களை வெட்டாமல் இருக்க வேண்டும். முக்கியமாகத் தொழில்நிறுவனங்கள் அதிகம் உள்ள SIPCOT போன்ற இடங்களில் OSR போன்று ஒரு இடம் ஒதுக்கி இருப்பார்கள். அந்த இடத்தை ஒரு சிறுகாடாக உருவாக்க வேண்டும். மரம் வெட்டுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதுதான் இன்றைக்கான சரியான வழி. வளர்ப்பதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்" என்றார்.