Published:Updated:

T23 புலியை உயிரோடு பிடிக்க களமாடிய வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு விருது! யார் இவர்கள் தெரியுமா?

வேட்டை தடுப்புக் காவலர்கள்

இந்த புலியை பிடிக்க நூற்றுக்கணக்கானோரின் கூட்டு உழைப்பு இருந்தாலும், வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்களான பழங்குடிகள் பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோருடைய பங்களிப்பு முக்கியமானது. உலக புலிகள் தின விழாவில் மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் விருது வழங்க உள்ளது.

T23 புலியை உயிரோடு பிடிக்க களமாடிய வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு விருது! யார் இவர்கள் தெரியுமா?

இந்த புலியை பிடிக்க நூற்றுக்கணக்கானோரின் கூட்டு உழைப்பு இருந்தாலும், வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்களான பழங்குடிகள் பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோருடைய பங்களிப்பு முக்கியமானது. உலக புலிகள் தின விழாவில் மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் விருது வழங்க உள்ளது.

Published:Updated:
வேட்டை தடுப்புக் காவலர்கள்

மசினகுடியை ஆட்டிப்படைத்த T 23 புலியை தென்னிந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேட்டைத்திறனை இழந்த ஆண் புலி ஒன்று கடந்த ஆண்டு இறுதியில் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி வந்தது. இந்தப் புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறை இறங்கியது. ஆனால், கூடலூர், மசினகுடி என அடுத்தடுத்து நகர்ந்து வேட்டையாடிக்கொண்டிருந்த இந்த T 23 புலியானது, புலிகள் நிறைந்த முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்தது. புலிகள் காப்பகத்துக்குள் குறிப்பிட்ட ஒற்றைப் புலியைத் தேடுவது சவால் நிறைந்த பணியாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்தப் புலியை சுட்டுக்கொல்லும் முடிவு கூட எடுக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே T 23 புலியை உயிருடன் பிடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டது வனத்துறை.

Tiger 23
Tiger 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிட்டத்தட்ட 20 நாள்களுக்கும் மேலாகப் போராடி T 23 புலியை உயிருடன் பிடித்தனர். இந்தப் புலியைத் தற்போது மைசூரு வன விலங்குகள் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். இந்தப் புலியைப் பிடிக்க நூற்றுக்கணக்கானோரின் கூட்டு உழைப்பு இருந்தாலும், வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்களாக இருந்த பழங்குடிகள் பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில், இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தமிழக வனத்துறை பரிந்துரை செய்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனை ஏற்று வேட்டை தடுப்பு காவலர்கள் மூவரையும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோருக்கு உலக புலிகள் தினமான ஜூலை 29-ம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலம் சந்திராப்பூர் ஃபாரஸ்ட் அகாடெமியில் நடைபெற இருக்கும் உலக புலிகள் தின விழாவில் மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் விருது வழங்க உள்ளது.

வேட்டை தடுப்புக் காவலர்கள் பொம்மன், மாதன், மீன காலன்
வேட்டை தடுப்புக் காவலர்கள் பொம்மன், மாதன், மீன காலன்

இது குறித்து முதுகலை புலிகள் காப்பக அதிகாரிகள், ``வேட்டை தடுப்புக் காவலர்களான இவர்கள் மூன்று பேருக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விருது வழங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. களப்பணியில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு இது போன்று அளிக்கப்படும் விருதுகள் பெரும் ஊக்கமாக அமையும்" என்றனர்.