Published:Updated:

நீலகிரி: முதுமலையின் அபூர்வ சகோதரர்கள்... 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரட்டை யானைகள்!

விஜய் - சுஜய்
விஜய் - சுஜய்

``யானைகள் இரட்டை குட்டிகளை ஈனுவது ரொம்ப அபூர்வமானது. விஜய்,சுஜய்னு பேர் வச்சி வளத்து வந்தோம்.இங்கேயே கும்கி ட்ரெயினிங்கும் கொடுத்தோம். ரெண்டு பேரும் ஒன்னாவேதான் இருப்பாங்க. காட்டு யானைகளைப் பிடிக்க போகாத ஊர் இல்ல".

ஆசியாவின் மிகப்பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் முதுமலை தெப்பக்காட்டில் செயல்பட்டு வருகிறது. பாரம்பர்ய அறிவைப் பெற்ற பழங்குடியின பாகன்களைக் கொண்டு அங்குசம் பயன்படுத்தப்படாத யானைகள் முகாம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

விஜய்
விஜய்

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் 5 கும்கி யானைகள், இரண்டு குட்டிகள் உட்பட மொத்தம் 27 வளர்ப்பு யானைகளைப் பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகளை, வனத்திற்குள் ரோந்து பணிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.கும்கி யானைகளின் சிறப்பு வாய்ந்த முகாமாக உள்ள தெப்பக்காட்டிலிருந்தே கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளை கையாள கும்கிகளை அனுப்பி வைக்கின்றனர்.

sujay&vijay with mother devaki
sujay&vijay with mother devaki

தெப்பக்காடு யானைகள் முகாமின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் அரிதினும் அரிதான இரட்டையர்களான விஜய், சுஜய் ஆகிய கும்கிகள் விளங்கி வருகின்றன.1971-ம் ஆண்டு தெப்பக்காடு முகாமில் தேவகி என்ற யானை தனது ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குட்டிகளை பிரசவித்தது. விஜய்,சுஜய் என்ற பெயரிட்டு பராமரிக்கப்பட்டு வந்த இரட்டையர்களுக்கு கும்கி பயிற்சி அளித்து தேர்ந்த கும்கிகளாக மாற்றினர். தற்போது இந்த கும்கி யானைகள் 50 வயதை நிறைவு செய்துள்ளன. 50-வது பிறந்தநாளை வனத்துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

அபூர்வ சகோதரர்களாக கருதப்படும் இந்த இரட்டையர்கள் குறித்து நம்மிடம் பேசிய பாகன் ஒருவர், ``1971ம் ஆண்டு மே மாசம் 20-ம் தேதி நம்ம முகாம்ல இருந்த தேவகி யானையோட பிரசவத்துல ஒரு ஆண் குட்டிய ஈன்றது. அடுத்த 30 நிமிஷத்துல இன்னொரு ஆண் குட்டிய ஈன்றது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈனுவது ரொம்ப அபூர்வமானது. விஜய்,சுஜய்னு பேர் வச்சி வளத்து வந்தோம்.இங்கேயே கும்கி ட்ரெயினிங்கும் கொடுத்தோம். ரெண்டு பேரும் ஒன்னாவேதான் இருப்பாங்க. காட்டு யானைகளைப் பிடிக்க போகாத ஊர் இல்ல.

விஜய் - சுஜய்
விஜய் - சுஜய்

2015-ல சாடிவயலுக்கு அனுப்பிவச்சோம். 2017-ல சாடிவயல் முகாம்ல இருக்கும்போது, அதிகால முகாமுக்கு வந்த வந்த காட்டு யானை தாக்கியதுல சுஜய்யோட வலதுபக்க கொம்பு (தந்தம்) உடைஞ்சது. சுஜய்ய மறுபடியும் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுவந்துட்டோம். இந்த ரெட்ட யானைகளுக்கு நேத்தோட 50 வயசு முடிஞ்சது. கொரோனா காலகட்டம் என்பதால பிறந்தநாள எளிமையா கொண்டினோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு