Published:Updated:

`மரத்தில் ஆணியடித்தால் என்ன தண்டனை தெரியுமா?' - எச்சரிக்கும் தேனி சூழல் ஆர்வலர்கள்

`ஆணி பிடுங்கும் திருவிழா’ இயக்கத்தினர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு தேவை என்கின்றனர்.

`ஆணி பிடுங்கும் திருவிழா’ தன்னார்வலர்கள்
`ஆணி பிடுங்கும் திருவிழா’ தன்னார்வலர்கள்

தேனி மாவட்ட தன்னார்வ அமைப்பினர் ஒன்றினைந்து `தேனி பனைநடவு - 2019’ என்கிற பெயரில், மாவட்டம் முழுவதும் 17 நீர் நிலைகளில் சுமார் 40,000 பனை விதைகளைப் போட்டு அதைப் பராமரித்துவருகின்றனர்.

மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது
மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது

இந்த நிலையில், கடந்த வாரம், விளம்பரப் பலகைகளைத் தாங்கி நிற்க மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளைப் பிடுங்கும் நோக்கோடு, `ஆணி பிடுங்கும் திருவிழா’ என்ற இயக்கத்தை உருவாக்கி, மாவட்டம் முழுவதிலும் உள்ள சாலையோர மரங்களில் ஆணி பிடுங்கிவருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு தேவை என்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய செந்தில், ``மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரையும் ஒன்றிணைத்து, பனை விதை நடவு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மரங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்காக ஆணி அடிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு, வார இறுதி நாளில் சாலையோர மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது
மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது

சிறியதும் பெரியதுமாக ஒரு மரத்தில் 120 முதல் 150 ஆணிகள் வரை அடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் 2.7 கிலோ ஆணிகள் பிடுங்கப்பட்டன. இந்த வாரம் 6.5 கிலோ ஆணிகள் பிடுங்கப்பட்டன. வாரா வாரம் ஆணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தேனியில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய`ஆணி பிடுங்கும் திருவிழா!’

மரத்தில் ஆணிகள் அடிப்பதால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஆயுள் காலம் குறைந்து, விரைவில் பட்டுப்போய்விடும். `சென்னை முனிசிபல் சட்டம் (CCMC) 1919-ம் ஆண்டு 361-1 விதிப்படி’ மரங்களில் ஆணி அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது
மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் பிடுங்கப்படுகிறது

மேலும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க அச்சட்டத்தில் வழிவகை உள்ளது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்

தேனி மக்களுக்கு தண்டனை, அபராதம் எல்லாம் வேண்டாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதும். மலைகள்சூழ் மாவட்டமான தேனி மக்கள், அதை உணர்ந்துகொள்வார்கள். இது தொடர்பாக, தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் பேசுவதற்காக, கோரிக்கை மனுவுடன், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்றோம். அவர் அக்கூட்டரங்கில் இல்லை.

`நாளிதழ்களில் விளம்பரம்.. ஃப்ளைட் டிக்கெட்.. ஹோட்டல் ரூம்!'- டிப் டாப் ஆசாமியால் ஏமாந்த பட்டதாரிகள்

எனவே, மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் மனு கொடுத்து விவரத்தை தெரியப்படுத்தினோம்.`இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஒரு ப்ரஸ் மீட் வைக்கலாம். கலெக்டரிடம் தெரியப்படுத்துகிறேன்.’ என்று கூறினார். மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைத்தால், மரங்களில் ஆணிகளே இல்லா மாவட்டமாக தேனி மாறும்.” என்றார்.