Published:Updated:

`அணுஉலை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!' - தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி

தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி
தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி

`விமானங்களில் விபத்து ஏற்படுகிறது என்பதால் நமக்கு விமானம் தேவை இல்லை என யாரும் சொல்வதில்லை. அதே போலத்தான் அணு உலைகளும்.'

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழியல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி. இன்று ஊட்டிக்கு வந்த அவர், ஊட்டி நகராட்சியின் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள தீட்டுக்கல் பகுதியை ஆய்வு செய்தார். அதன்பின்னர் சேரிங்கிராஸ் பகுதியில் நடைபெற்ற மனிதக் கழிவுகளை உரமாக்குவது குறித்த பயிற்சி வகுப்பில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உறையாற்றினார்.

பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி.
பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி.

அப்போது பேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி, ``கூடங்குளத்தில் அணு உலை அமைக்கப் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், வைகோ உட்பட பலரும் வாதாடினர்.

அப்போது, சோவியத் யூனியன் மற்றும் ஜப்பானை உதாரணமாகச் சொன்னார்கள். அணு உலையில் விபத்து ஏற்பட்டு சோவியத்தில் 20,000 பேர், ஜப்பானில் 30,000 பேர் இறந்துள்ளனர். எனவே, கூடங்குளத்தில் உள்ள அணுஉலையிலும் விபத்து ஏற்பட்டு மக்கள் இறக்க நேரிடும் என வாதங்களை முன்வைத்தனர்.

பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி.
பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஜோதிமணி.

அரசியல் தலைவர் வைகோவும் சிறப்பாக வாதங்களை முன்வைத்தார். ஆனால், அணு உலை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விமானங்களில் விபத்து ஏற்படுகிறது என்பதால் நமக்கு விமானம் தேவை இல்லை என யாரும் சொல்வதில்லை. அதேபோலத்தான் அணு உலைகளும். ஆனால் கூடங்குளத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அணுஉலை செயல்பட்டு வருகிறது.

இதேபோல், சுற்றுச்சூழல் தொடர்பாக வழக்கு ஒன்று வந்தது. டெல்லி அருகில் சாலை அமைக்க 56,000 மரங்களை வெட்ட அனுமதி வேண்டும் என வந்தார்கள். உடனே, அனுமதி வழங்காமல் குழு ஒன்றை அனுப்பி கள நிலவரத்தை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னோம்.

பங்கேற்ற உறுப்பினர்கள்
பங்கேற்ற உறுப்பினர்கள்

இந்த அறிக்கையில் 4,000 மரங்களை மட்டும் அகற்றினால் போதும், அந்தச் சாலையை அமைக்க முடியும் எனத் தெரியவந்தது. நான் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்தேன், 7 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் எனக்குச் சுற்றுச்சூழல் குறித்த பெரிய ஞானம் கிடையாது.

நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக மாற்ற நம்மிடம் இருந்து முதலில் மாற்றம் வர வேண்டும். முதலில் வீட்டின் குப்பைகளைப் பிரித்து வழங்கவேண்டும். ஊட்டி நகராட்சி குப்பைக்கிடங்கைச் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பின் செல்ல