Published:Updated:

நீலகிரி: பிடிபட்ட `ரிவால்டோ' யானை... வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

பழங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்டவற்றை கொடுத்து படிப்படியாக பழக்கி வந்தோம்.க்ரால் அருகில் வந்த யானையை உள்ளே செல்லவும் பழக்கினோம்.இன்று காலை க்ராலுக்குள் நுழைந்த யானையை அடைத்துள்ளோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டுயானை ஒன்று பல ஆண்டுகளாக உலவி வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குறைபாட்டுடன் உள்ளது.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

பெரும்பாலும் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளை சுற்றியே வலம் வரும் இந்த யானைக்கு இந்த பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சிலர் சட்டவிரோதமாக உணவளித்து,சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி பொருளாக்கி ஆதாயம் பெற்று வந்தனர்.

இதே பகுதியில் உலவி வந்த எஸ்.ஐ என்ற ஆண் காட்டுயானையின் மீது எரியும் தீப்பந்தத்தை தூக்கியெறிந்து கொளுத்திய சூடு இன்னும் தணியாத நிலையில்,ரிவால்டோவை முகாமுக்கு கொண்டுச் செல்ல முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த யானைக்கு சிகிச்சை அளித்து குணமாக்கியப்பின் மீண்டும் வனத்துக்குள் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் தற்காலிக க்ரால் அமைத்து யானையை அடைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.இன்று காலை க்ராலுக்குள் வந்த ரிவால்டோவை வனத்துறையினர் அடைத்தனர்.

பிடிபட்ட ரிவால்டோ
பிடிபட்ட ரிவால்டோ

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி, ``தும்பிக்கையில் பாதிப்பு இருப்பதால் இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. பழங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்டவற்றை கொடுத்து படிப்படியாக பழக்கி வந்தோம். க்ரால் அருகில் வந்த யானையை உள்ளே செல்லவும் பழக்கினோம். இன்று காலை க்ராலுக்குள் நுழைந்த யானையை அடைத்துள்ளோம். இதற்கு எத்தகைய பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை துவக்கப்படும்.சிகிச்சை முடிந்த பின்னரே வனத்தில் விடுவிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு