Published:Updated:

நீலகிரி: 25 கேமராக்கள், 4 கும்கிகள்... 4-வது நாளாகத் தொடரும் `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்'

Operation broken tusker
Operation broken tusker

காட்டு யானையை சுற்றிவளைத்து துப்பாக்கி மூலம் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியைச் செலுத்தினர். உடலில் பாய்ந்த ஊசியுடன் யானை தப்பி ஓடியது.

`கடந்த ஞாயிற்றுக்கிழமை நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி டேன்டீ குடியிருப்பு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரையும் காட்டு யானை ஒன்று தாக்கிக் கொன்றது.

Operation broken tusker
Operation broken tusker

இதே யானை மேலும் சிலரை தாக்கிக் கொன்றுள்ளதாகவும் அந்த யானையைப் பிடிக்கவேண்டும் எனவும் பந்தலூரில் கடைகளை அடைத்து கடந்த திங்கள்கிழமை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதர்களைத் தாக்கி வரும் ஒற்றை யானையைப் பிடிக்க நான்காவது நாளாக கும்கி மற்றும் ட்ரோன் உதவியுடன் வனத்துறையினர் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Operation broken tusker
Operation broken tusker

மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய வனத்துறை, உடைந்த கொம்பன் என அறியப்படும் குறிப்பிட்ட அந்த யானையைப் பிடிக்க அனுமதி பெற்று 'ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' காட்டு யானையைத் தேடிக் களமிறங்கினர்.

நேற்று முன்தினம் செப்பந்தோடு வனத்தில் காட்டு யானையைச் சுற்றிவளைத்து துப்பாக்கி மூலம் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியைச் செலுத்தினர்.

Operation broken tusker
Operation broken tusker

உடலில் பாய்ந்த ஊசியுடன் யானை தப்பி ஓடியது. தற்போது வரை யானை இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். நான்காவது நாளாக இன்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானையைத் தேடும் பணி குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், "உடைந்த கொம்பன் காட்டு யானையைப் பிடிக்க தற்போது கலீம், விஜய், பொம்மன், வசீம் ஆகிய நான்கு கும்கிகளைப் பயன்படுத்தி வருகிறோம். கோட்டமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளோம்.

Operation broken tusker
Operation broken tusker

வேட்டைத் தடுப்பு காவலர்கள், யானை கண்காணிப்பு மற்றும் மீட்புக் குழுவினர் என நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் களத்தில் உள்ளனர். மேலும், இரண்டு ட்ரோன் கேமராக்களையும் பயன்படுத்தி வருகிறோம்" என்றார்.

காட்டு யானையைத் தேடுவதில் வனத்துறையின் செயல்பாடு குறித்து நம்மிடம் பேசிய நாயக்கன் சோலை தியாகராஜா, "இந்த யானைய பல வருஷமா எங்களுக்குத் தெரியும். சமீபமா ரொம்ப ஆக்ரோஷமா மாறியிருக்கு.

Operation broken tusker
Operation broken tusker

மூணு பேரை தாக்கிடுச்சு. பிடிக்காம விட்டாலும் மறுபடியும் யாரையாச்சும் தாக்கும். உடனடியா பிடிச்சா போதும். மக்கள் யாரும் வெளிய நடமா முடியல" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு