Published:Updated:

`குழந்தைகளைக் குறிவைக்கும் 30,000 விளம்பரங்கள்!' -துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்

யுனிசெஃப்
யுனிசெஃப் ( Pixabay )

குழந்தைகளைக் குறிவைத்து பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகின்ற நிறுவனங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மிகப் பெரியவை.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை நல அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து, குழந்தை ஆரோக்கியம் தொடர்பான வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கியது. அந்த வல்லுநர் குழு, நம் குழந்தைகளின் எதிர்காலத்தின்மீது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தாக்கம் என்ன என்பது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தை ஆரோக்கியம் தொடர்பான 40 வல்லுநர்களைக்கொண்ட அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ``2015-ம் ஆண்டின்போது, உலக நாடுகள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஏற்றுக்கொண்டன. இருப்பினும், ஐந்து ஆண்டுகள் கழித்து அதைத் திரும்பிப் பார்க்கையில், அந்த இலக்கை நோக்கி வெகு சில நாடுகளே பயணிப்பது தெரிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

காலநிலை அவசரம், சூழலியல் சீர்கேடுகள், அதிகமாகிக் கொண்டிருக்கும் இடப்பெயர்வு மற்றும் சூழலியல் அகதிகளின் எண்ணிக்கை, ஏற்றத்தாழ்வுகள், எளிய மக்களின் பொருளாதாரத்தை வேட்டையாடத் துடிக்கும் பெருமுதலாளிகளின் வியாபார நுணுக்கங்கள் ஆகியவையே ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை, அவர்களுடைய எதிர்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா... மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன? #VikatanInfographics

உலகளவில் குழந்தைகள் துரித உணவுப் பண்டங்கள் தொடர்பாக, ஓராண்டுக்குக் குறைந்தபட்சம் 30,000 விளம்பரங்களைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் குழந்தைகளும் இளைஞர்களும் தொலைக்காட்சியில் கால்பந்து, கிரிக்கெட், ரக்பி போன்ற விளையாட்டுக்களைப் பார்க்கும்போது ஓராண்டுக்குச் சுமார் 51 மில்லியன் மதுபான விளம்பரங்களை விளையாட்டின் இடைவேளையின்போது பார்க்கிறார்கள்.

விளம்பரங்கள்
விளம்பரங்கள்

குழந்தைகளைக் குறிவைத்தே சமூக வலைதளங்கள் மற்றும் இதர பல இணையதளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்ற நிறுவனங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மிகப் பெரியது. இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த யுனிசெஃப் வல்லுநர் குழு, உலக நாடுகளை இந்தப் பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு