Published:Updated:

வேலூர்: ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெளியேறும் கரும்புகை... அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்!

ஆவினிலிருந்து வெளியேறும் கரும்புகை

வேலூரை அடுத்த சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

வேலூர்: ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெளியேறும் கரும்புகை... அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்!

வேலூரை அடுத்த சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

Published:Updated:
ஆவினிலிருந்து வெளியேறும் கரும்புகை

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது ஆவின் பால் குளிரூட்டும் நிலையம். வேலூர் மாநகராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்த நிலையத்திலிருந்துதான் பெரும்பகுதி பால் பதப்படுத்தப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆவின் பால் நிலையத்தில் உள்ள சிம்னியில் அதிக கரும்புகை வெளியேறும் நிகழ்வு அடிக்கடி நடந்துவருகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், அந்த வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

ஆவின்
ஆவின்

இந்த வழியாகச் செல்லும் பலரும் தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுத்து, `கரும்புகை வெளியேறுவதற்கான காரணம் என்ன... ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கிறதா?' என்று கேட்டு கரும்புகை வெளியேறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுவாசக் கோளாறு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கரும்புகை வெளியேறுவதற்கான காரணம் குறித்து வேலூர் ஆவின் பொது மேலாளரிடம் விளக்கம் கேட்டோம். ``இந்தக் கரும்புகை பாய்லர் பழுது காரணமாக வெளியேறவில்லை. இந்த நிலையத்தில் 2 டன் பாய்லரைப் பயன்படுத்துகிறோம். இந்த நிலையத்துக்கு வரும் பாலின் அளவு அதிகமாக இருப்பதால் 2 டன் பாய்லர் மூலம் முழுப் பாலும் ஒரே நேரத்தில் பதப்படுத்தப்படுவதில்லை. இதனால் நான்கு முறைக்கு மேல் பாய்லர்கள் இயக்கப்படுகின்றன. பாலின் அளவுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 4-லிருந்து 5 முறை பாய்லர்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாய்லர்கள் இயக்கப்படும்போது முதல் ஐந்து நிமிடங்கள் மட்டும் கரும்புகை வெளியேறுகிறது, அதற்குப் பிறகு சாதாரணமாகவே புகை வெளியேறுகிறது. ஒரு முறை பாய்லர் இயக்கப்பட்ட பிறகு அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை ஓய்வு கொடுப்போம், பிறகு மீண்டும் பாய்லர்கள் இயக்கப்படும்.

ஆவின்
ஆவின்

நான்கு முறைக்கு மேல் பாய்லர்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எப்போதும் கரும்புகையாகவே வெளியேறுவதுபோல் தோற்றம் அளிக்கும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்திருந்தால் மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து அனுமதி கிடைத்திருக்காது. மேலும், இந்த சிம்னி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட உயரத்துக்கு மேல்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.