Published:Updated:

`காலநிலை அவசரம்!’ - 2019-ம் ஆண்டின் வார்த்தையாக அங்கீகரித்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதி

காலநிலை மாற்றம் உலகெங்கும் அனைவரையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற, இனியும் தாமதிக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அவசரத்தை இந்த வார்த்தை உணர்த்துகிறது.

காலநிலை அவசரம்
காலநிலை அவசரம் ( Pixabay )

ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, ஆண்டுதோறும் அந்த வருடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு 'அந்த ஆண்டின் வார்த்தை' என்ற அங்கீகாரத்தை வழங்கும். அதுபோல், இந்த வருடம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாக, 2019-ம் ஆண்டுக்கான வார்த்தையாக (Word of 2019) 'காலநிலை அவசரம்' (Climate Emergency) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 'காலநிலை அவசரம்' என்ற வார்த்தையின் பயன்பாடு அதிகமாகியுள்ளதாலும் இது முக்கியமாகப் பேசப்பட வேண்டிய விஷயம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். காலநிலை மாற்றம் உலகெங்கும் அனைவரையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற, இனியும் தாமதிக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அவசரத்தை இந்த வார்த்தை உணர்த்துகிறது.

ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாண்டிலும் மே மாதத்தில் கனடாவிலும் பிரான்ஸிலும் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும், இந்த வார்த்தையின் பயன்பாடு 10,796% அதிகரித்துள்ளது. பொதுவாக, 'எமெர்ஜென்சி' என்ற வார்த்தையுடன் பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருந்த 'ஹெல்த் எமெர்ஜென்சி'யை விட மூன்று மடங்கு அதிகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் என்று கூறுவதைவிட, காலநிலை அவசரம் என்று கூறுவதால், இதனுடைய அவசரத்தை அழுத்தமாக உணரமுடிகிறது. இனிமேலும், இதுகுறித்து நாம் பொறுமையாக முடிவுகள் எடுக்கலாம் என்று எண்ணத்தை மாற்ற வேண்டும்.

இந்த வருடம் மட்டும் உலகின் பல நாடுகளில் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்திலும் அதைத் தொடர்ந்து மே மாதத்தில் கனடாவிலும் பிரான்ஸிலும் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தின் வார்த்தை என்றால் அது ஒரு வார்த்தையாகத்தானே இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

ஆம், ஆனால் சில சமயங்களில் இது போன்ற இரண்டு வார்த்தைகள் கொண்டவையும் அவற்றின் முக்கியத்துவம் கருதி ஏற்றுகொள்ளப்படுகின்றது.

எப்போதும் அந்த வருடத்தின் வார்த்தையை, அந்த வருடத்தில் மக்களின் மனநிலை மற்றும் அதிகம் பேசப்படும் கருத்து எது என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் தேர்ந்தெடுக்கின்றனர்.