Published:Updated:

`என்ன மாடில மரம் வளர்க்குறாங்களான்னு சிரிக்கிறாங்க!' - அரசு கட்டடத்தின் பரிதாப நிலை

சிதிலமடைந்த மீஞ்சூர் அரசு வேளாண்மை கட்டடம்
News
சிதிலமடைந்த மீஞ்சூர் அரசு வேளாண்மை கட்டடம்

``இந்த வேளாண்மை கட்டடத்துக்கு பின்புறத்திலேயே பழைய பி.டி.ஓ அலுவலர் குடியிருப்பு சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதன் வழியாகவும் ஆட்கள் நடமாடுகிறார்கள். இரவில் ஆட்கள் வந்து செல்கிறார்கள். திடீரென இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால் சேதம் அதிகமாக இருக்கும்."

ஆங்காங்கே அரசு கட்டிடங்கள், தனியார் கட்டடங்கள் விழுவது தொடர்கதை ஆகிவிட்டது. அரசு கட்டடங்கள் பரிதாப நிலையில் இருந்தாலும் அதை இடித்து புதிய கட்டடங்கள் கட்டவோ தயாராக இல்லை. இதற்கு ஓர் உதாரணமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வேளாண்மை துறை கட்டடங்கள். சென்னை அடுத்த எண்ணூர் துறைமுக த்திலிருந்து மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த சிதிலமடைந்த அரசு கட்டடங்கள்.

இதுகுறித்து மீஞ்சூரை சேர்ந்த பொது மக்களிடம் பேசியபோது, ``அரசு வேளாண்மை துறை சார்பாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் கட்டடத்தில் விரிசல் விழ அருகிலேயே புதிய வேளாண்மை கட்டடம் கட்டப்பட்டு அதற்கு மாற்றப்பட்டது. பிறகு இந்தக் கட்டடத்தை கண்டுக்காமலே விட்டுவிட்டனர். இவ்வளவுக்கும் இந்தக் கட்டடத்தின் வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பலதரப்பினரும் செல்கின்றனர். இந்தக் கட்டடத்துக்கு பின்புறத்தில் அரசு மாணவர் விடுதியும் இருக்கிறது. அங்கே தங்கும் மாணவர்கள் இந்த வழியாகத்தான் செல்கிறார்கள். திடீரென இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால், அதனால் உண்டாகும் இழப்புக்கு யார் பொறுப்பேற்பது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வேளாண்மை கட்டடத்துக்கு பின்புறத்திலேயே பழைய பி.டி.ஓ அலுவலர் குடியிருப்பு சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதன் வழியாகவும் ஆட்கள் நடமாடுகிறார்கள். இரவில் ஆட்கள் வந்து செல்கிறார்கள். ஆடு, மாடுகள் தங்குகின்றன. திடீரென இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால் சேதம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து அரசுக்கும் தெரிவித்து விட்டோம். அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். நடவடிக்கைதான் எடுத்த பாடில்லை. இங்கு புது கட்டடம் கட்ட வேண்டும் என்று கேட்கவில்லை. இதை இடித்து தள்ளிவிடுங்கள். கட்டடங்களை பிறகு கட்டிக் கொள்ளலாம். பருவ மழையால் தண்ணீர் கட்டடங்களுக்குள் நன்றாக ஊறிவிட்டது. இது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டங்களின் மேல்தளத்தில் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து பார்ப்பதற்கு ஏதோ அரசு கட்டங்களில் மரங்கள் வளர்கிறார்களோ என்று கேலி செய்கின்றனர். அரசு இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சிதிலமடைந்த மீஞ்சூர் அரசு வேளாண்மை கட்டடம்
சிதிலமடைந்த மீஞ்சூர் அரசு வேளாண்மை கட்டடம்

இதுகுறித்து அரசு தரப்பில் கேட்டபோது, ``பழைய கட்டடத்தை இடித்துவிட்டு இங்கே புதிய கட்டடம் கட்டுவதற்கான புரபோசல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இங்கே புதிய கட்டடம் எழுப்பப்பட்டுவிடும்" என்றவரிடம் கட்டடத்தையாவது இடித்து விடலாமே என்றபோது, ``கட்டடத்தை இடிப்பதற்கு ஒரு செலவு, புதிய கட்டடம் எழுப்புவதற்கு என இரண்டு செலவு ஆகும். அரசுக்கு தேவையில்லாத செலவு. அதனால் அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டடம் எழுப்பப்பட்டுவிடும்" என்றார் கூலாக.

தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து விழும் செய்திகள் அதிகமாகி வருவதால், விரைவில் அரசு இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.