Published:Updated:

'சிக்ஜில்சால்' எனும் ஆலையின் அச்சுறுத்தல்: மரண பீதியில் தஞ்சை கிராமம்!

கே.குணசீலன்

'வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கு ரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது. தினமும் 40,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

சிக்ஜில்சால்
சிக்ஜில்சால்

"எங்கள் ஊரில் செயல்படும் நிறுவனத்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதோடு பல்வேறு நோய்களும் பரவுகின்றன. இந்த நிறுவனத்தை மூட வேண்டும்" என்ற கோரிக்கையோடு பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள புதுக்குடி கிராம மக்கள்.

இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றுடன், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து புதுக்குடி கிராமத்தில், 'சிக்ஜில்சால்' என்ற பெயரில் தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகின்றன. காற்றிலிருந்து ரசாயன வாயுக்களைப் பிரித்தெடுக்கும் இந்தத் தொழிற்சாலை மீதுதான், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

'சிக்ஜில்சால்' எனும் ஆலையின் அச்சுறுத்தல்: மரண பீதியில் தஞ்சை கிராமம்!

புதுக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். "கடந்த 2011-ம் ஆண்டு, 'சேவா காஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகியவை மட்டுமே பிரித்தெடுக்கப்பட்டன. பிறகு, இத்தாலி நாட்டு நிறுவனமான சிக்ஜில்சால் கைக்கு மாறிய பிறகு, ஆர்கான் வாயுவையும் எடுக்கத் தொடங்கினர். தண்ணீரில் பலவித வேதிப்பொருள்களைக் கலந்து, அதற்குள் காற்றை அதிவேகத்தில் பீய்ச்சி வாயுக்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

'வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கு ரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது. தினமும் 40,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் 140 லிட்டர் கழிவுநீரை மட்டுமே நிலத்துக்குள் விடவேண்டும்' என்பன உள்ளிட்ட பல விதிமுறைகளில், எதையுமே சிக்ஜில்சால் நிறுவனம் பின்பற்றுவதில்லை. இந்த நிறுவனம், தினமும் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சியதோடு, 35,000 லிட்டர் ரசாயனக் கழிவுநீரை நிலத்துக்குள் விட்டுவந்தது. ஒருமுறை இந்த நிறுவனத்தின் கழிவுநீர் வயலுக்குள் சென்றதால், மொத்த பயிரும் கருகிவிட்டது. அந்த ரசாயனங்களின் விளைவு குறித்து தெரியவந்த பிறகுதான் போராட்டங்களைத் தொடங்கினோம்" என்றார்.

ஒருமுறை இந்த நிறுவனத்தின் கழிவுநீர் வயலுக்குள் சென்றதால், மொத்த பயிரும் கருகிவிட்டது.

அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், "இந்த நிறுவனம் அதிக நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போய்விட்டது. கழிவுகள் நிலத்துக்குள் விடப்படுவதால், பூமிநீர் கடின நீராக மாறிவிட்டது. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நீரைக் குடிப்பதால் பலரும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, எங்கள் ஊரில் 10 பேர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட 100 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்" என்றார்.

> இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் என்ன சொல்கிறாகள்? - 'அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்!' எனும் ஜூனியர் விகடன் சிறப்புச் செய்தியில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/