Published:Updated:

``ஜாகிங் செய்துகொண்டே குப்பை அகற்றலாம் வாங்க!"- நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு

ப்ளாகிங் ரன்னில், இரண்டு கிலோமீட்டர் ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்ற வேண்டும். இந்தப் பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்லாது, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படும்

Modi
Modi

ஐ.நா சபையில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய பிரதமர் மோடி, `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, வானொலி வழியாக மக்களிடம் பேசி வரும் பிரதமர், நேற்றைய நிகழ்ச்சியில் `ஃபிட் இந்தியா' இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

`இந்தியர்களின் உழைப்பைக்கண்டு உலகமே வியக்கிறது!’ - ஐ.ஐ.டியில் நெகிழ்ந்த மோடி

``மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று `ஃபிட் இந்தியா ப்ளாகிங் ரன்(Fit India Plogging run) `ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ப்ளாகிங் ரன்னில், இரண்டு கிலோமீட்டர் ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்ற வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்லாது, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படும். இந்தப் பயிற்சியில் நாட்டு மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டி அனைவரையும் அழைக்கிறேன். இந்திய மக்கள் 130 கோடிப் பேரும் பங்கேற்றால், பிளாஸ்டிக் அரக்கனை அழிக்க முடியும்" என்றார்.

Modi
Modi

தொடர்ந்து, இன்று சென்னை வந்த பிரதமர் மோடி, ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் பேசும்போதும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நினைவுபடுத்தியவர், ஒருமுறை பயன்படுத்தும் ரக பிளாஸ்டிக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

`யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..'- புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி ஐ.நாவில் பேசிய மோடி!