Published:Updated:

துப்புரவுத் தொழிலாளர்களோடு சேர்ந்து பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுத்த பிரதமர்!

க.சுபகுணம்

துப்புரவுத் தொழிலாளர்களைக் கவுரவித்த கையோடு, மேடையிலிருந்து இறங்கி வந்து அவர்களுடனே தரையில் அமர்ந்து பிளாஸ்டிக்கைக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுத்தார் பிரதமர் மோடி.

PM Narendra Modi
PM Narendra Modi ( ANI )

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களோடு தரையில் அமர்ந்து குப்பைகளிலிருந்த பிளாஸ்டிக்கைத் தனியே பிரித்தெடுத்த ஒளிப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில், 'தூய்மையே சேவை' (Swachhta Hi Sev) என்ற பெயரில் செய்யப்படும் தூய்மைத் திட்டத்திற்காக ஒரு கூட்டம் நடந்தது.

Plastic
Plastic

இந்தத் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் இருபத்தைந்து பேர் முகமூடி, கையுறை போன்றவற்றோடு குப்பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமரைச் சந்தித்தனர்.

அவர்கள் சேகரிக்கும் கழிவுகளைப் பற்றியும் அதிலிருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு குறித்தும் பிரதமர் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர்களின் இந்த உழைப்பு அந்தக் கூட்டத்தின் போது கவுரவிக்கப்பட்டது. அவர்களைக் கவுரவித்த கையோடு, மேடையிலிருந்து இறங்கி வந்து அவர்களுடனே தரையில் அமர்ந்து பிளாஸ்டிக்கைக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுத்தார். அரசு, பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தனது அரசாங்கம், 2022-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்குமென்றும் அப்போது பிரதமர் குறிப்பிட்டார்.

Vikatan