Published:Updated:

சதுப்பு நிலங்கள் `ராம்சர்' பட்டியலில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் இதுதான்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் சதுப்புநிலங்கள் பாதுகாக்கின்றன. சதுப்புநிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், அவற்றைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் `ராம்சர் அமைப்பு' என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டுவருகிறது.

சதுப்பு நிலங்கள் `ராம்சர்' பட்டியலில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் இதுதான்!

புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் சதுப்புநிலங்கள் பாதுகாக்கின்றன. சதுப்புநிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், அவற்றைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் `ராம்சர் அமைப்பு' என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டுவருகிறது.

Published:Updated:
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

உலகெங்கிலும் உள்ள ஈரப்பதம் மிக்க புல்வெளிப்பகுதிகள், நதிகள், நீரோடைகள், கடலோர குடியிருப்புப் பகுதிகள், குளங்கள், குட்டை மற்றும் ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள் சதுப்பு நிலக்காடுகள் போன்றவை ஈரநிலங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன.

சதுப்பு நிலம்
சதுப்பு நிலம்

தற்போது பெருகிவரும் நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட், சுற்றுலா மையங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல் மற்றும் வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், இறால் பண்ணைகள் போன்றவற்றால் சதுப்பு நிலங்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன. புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் சதுப்பு நிலங்கள் பாதுகாக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சதுப்புநிலங்களின் அழிவை தடுப்பதற்காகவும், அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து வதற்காகவும் `ராம்சர் அமைப்பு 'என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் இரான் நாட்டின் ராம்சர் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்புநிலங்களை பாதுகாக்கும் பிரகடனம் வெளியிடப்பட்டது.

பூநாரைகள்
பூநாரைகள்
Pixabay

இதில் இந்திய உள்ளிட்ட 161 நாடுகள் கையொப்பமிட்டன. இந்த பிரகடனத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் நாள் உலக சதுப்பு நிலங்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்புநிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறை 1982-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரநிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதன் செழுமையைப் பேணுதலே ராம்சார் பிரகடனத்தின் முக்கிய குறிக்கோளாகும். சர்வேதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்ளையும் பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அமைப்பு அடையாளப்படுத்துகிறது.

ராம்சர் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் ஏற்கெனவே இந்தியாவின் 49 சதுப்பு நிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே கோடியக்கரை மட்டுமே ராம்சர் பட்டியலில் இருந்து வந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சரணாலயம் போன்ற தமிழகத்தில் உள்ள மூன்று சதுப்பு நிலப்பகுதிகளும், மிசோரம் மாநிலத்தின் பாலா சதுப்புநிலம், மத்தியப்பிரதேசத்தின் சக்ய நகர் சதுப்புநிலம் போன்றவை புதிதாக ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

ஈரநிலத்தில்  பறவை | சின்ன அரிவாள் மூக்கன்
ஈரநிலத்தில் பறவை | சின்ன அரிவாள் மூக்கன்
Prabu

இதன் மூலம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அதாவது ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சர் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளிட்ட தகவலில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டிலுள்ள சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராம்சர் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சேர்க்கப்பட்டது குறித்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆய்வு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர் ஜெயஸ்ரீயிடம் பேசினோம்.

``இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சதுப்புநிலங்கள் ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

ராம்சர் பட்டியலில் ஓர் ஈரநிலம் வந்துவிட்டால் அதில் மூன்று முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது அந்த இடம் மிக முக்கியமான இடமாகக் கருதப்படும். மேலும் அந்த ஈர நிலத்தை வேறு எந்தவித பயன்பாட்டுக்கும் நாம் மாற்ற முடியாது.

துடுப்பு வாயன் பறவை
துடுப்பு வாயன் பறவை

இதற்காக ஒரு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி, அந்த மேலாண்மை திட்டத்தில் கூறப்படும் பரிந்துரைகளை எல்லாம் அந்த ஈரநிலப்பகுதியில் அமல்படுத்த வேண்டும். ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்ட ஈரநிலங்கள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்று சர்வதேச அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ரம்சார் பட்டியலில் சதுப்புநிலங்களை ஒருபுறம் கொண்டு வருவது இருப்பினும், அந்த நிலத்தை சரியாக பராமரிக்காவிட்டால் மீண்டும் அது நெகட்டிவ் பட்டியலில் சேர்ந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதற்கான மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஜெயஶ்ரீ வெங்கடேசன்
ஜெயஶ்ரீ வெங்கடேசன்

இந்த ராம்சர் பட்டியலில் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் சதுப்பு நிலத்தை, மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் கடைசிவரை சதுப்பு நிலமாகவே இருக்க விடுவார்கள். இந்த சதுப்பு நிலங்கள் ராம்சரில் இணைக்கப்பட்டாலும் மாநில அரசே இந்த நிலங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்று சொல்லி முடித்தார்.