Published:Updated:

சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் சுரங்கம், தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது; உச்ச நீதிமன்றம்!

பந்திப்பூர் சரணாலயம்

வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரிக்க கோரி மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் சுரங்கம், தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது; உச்ச நீதிமன்றம்!

வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரிக்க கோரி மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Published:Updated:
பந்திப்பூர் சரணாலயம்

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் உள்ளே 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த ஒரு சுரங்மோ, தொழிற்சாலைகளோ இருக்க கூடாதென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனிதனின் அதீத பயன்பாட்டுக்காக இயற்கையைச் சுரண்டுவதும், வன விலங்குகள் வாழக்கூடிய பகுதிகளில் தொழிற்சாலைகளும், சுரங்கப் பணிகளும் சட்டவிரோதமாகவும் இயங்கிக் கொண்டு வருவதும் வாடிக்கையாக இருக்கின்றன. எனவே, வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரிக்கக் கோரி மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவுக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெள்ளிக் கிழமையன்று வழங்கியது. அதில் பல்லுயிர்கள் வாழும் பகுதிகளில், குறிப்பாக வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி குறைந்தபட்சம் 1 கிமீ தொலைவில் உள்ள சூழல் பாதுகாப்பு பகுதியில் (buffer zone) சுரங்கமோ, தொழிற்சாலைகளோ இருக்கக் கூடாது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதிகளில் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அது முதன்மை வனப் பாதுகாவலரின் அனுமதியுடன் மட்டுமே தொடரப்பட வேண்டும். தற்போது சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் அமைந்துள்ள கட்டமைப்புகளின் பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குள் சுரங்கம் தோண்டவும் முடியாது. தொழிற்சாலைகளை இயக்க அனுமதியும் கிடையாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism