Published:Updated:

திடீரென இறக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள்; ONGC-யின் வேலையா? பீதியில் கடுவன்குடி கிராம மக்கள்!

ஓ.என்.ஜி.சி குழாய்கள்

இப்படித்தான் ஏற்கெனவே எண்ணெய் நிறுவனம் பெயரில் குழாய்களை இறக்கி வைப்பதும், அதன்பின் ஓ.என்.ஜி.சி டிரில்லிங் போடுவதும் நிறைய நடந்துச்சு. நாங்க இதுமாதிரி பலதடவை ஏமாந்தும் போயிருக்கோம். எனவே, உடனடியாகக் குழாய்கள் இறக்குவதை நிப்பாட்டுங்க என்றோம்.

திடீரென இறக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள்; ONGC-யின் வேலையா? பீதியில் கடுவன்குடி கிராம மக்கள்!

இப்படித்தான் ஏற்கெனவே எண்ணெய் நிறுவனம் பெயரில் குழாய்களை இறக்கி வைப்பதும், அதன்பின் ஓ.என்.ஜி.சி டிரில்லிங் போடுவதும் நிறைய நடந்துச்சு. நாங்க இதுமாதிரி பலதடவை ஏமாந்தும் போயிருக்கோம். எனவே, உடனடியாகக் குழாய்கள் இறக்குவதை நிப்பாட்டுங்க என்றோம்.

Published:Updated:
ஓ.என்.ஜி.சி குழாய்கள்

மயிலாடுதுறை நகராட்சிக்கு மிக அருகிலுள்ள கிராமம்தான் கடுவன்குடி. இந்தக் கிராமத்தில் நீடுரைச் சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமாகப் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. 

பயிர்ச் சாகுபடி செய்யாமல் வெறுமனே கருவேலங்காடுகளாய் காட்சியளித்த அந்த இடத்தில் கடந்த இரண்டே நாள்களில் 50 -க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளில் ராட்சத எண்ணெய்க் குழாய்கள் வந்து இறங்கியுள்ளன. புதர் மண்டிக்கிடந்த இடத்தில் திடீரென வெட்டவெளி மைதானம் உருவாகி, அதில் கொட்டிக் கிடக்கும் குழாய்களைக் கண்டதும் அந்தக் கிராம மக்கள் என்னவென்று தெரியாமல் பீதியில் உறைந்துள்ளனர்.

ஓ.என்.ஜி.சி
ஓ.என்.ஜி.சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றி நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் காளிதாசனிடம் பேசியபோது, ``ஒரே நாள்ல பகல்ல இடத்தை சுத்தப்படுத்துறாங்க. இரவோடு இரவா 200 குழாய்களைக் கொண்டு வந்து இறக்குறாங்க.  இதனால் அச்சம் அடைந்த மக்கள் எனக்குத் தகவல் சொன்னதும், உடனே அந்த இடத்துக்குப் போனோம். `இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனம் எண்ணூர் - தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுது'னு சொன்னாங்க.

இப்படித்தான் ஏற்கெனவே எண்ணெய் நிறுவனம் பெயரில் குழாய்களை இறக்கி வைப்பதும், அதன்பின் ஓ.என்.ஜி.சி  டிரில்லிங் போடுவதும் நிறைய நடந்துச்சு.  நாங்க இதுமாதிரி பலதடவை ஏமாந்தும் போயிருக்கோம். எனவே, உடனடியாகக் குழாய்கள் இறக்குவதை நிப்பாட்டுங்க என்றோம். மறுத்ததால் அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி `ஓ.என்.ஜி.சி. செயல்பட அனுமதிக்க மாட்டோம்னு' சொல்லி இருக்காங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் கட்சிக்காரங்க சொல்வதைக் கேட்க மாட்டோம். மக்களிடம் கருத்து கேட்போம்னு சொன்னாங்க. கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாவிட்டால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பாங்க. இதையெல்லாம் மீறி குழாய்களை வைத்தால் கதிராமங்கலம் போல் கடுவன்குடி கிராமமும் போராட்டக்களமாக மாறும்" என்றார் ஆவேசமாக.

இன்று (02.04.2022 )  கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதுபற்றிக் கடுவன்குடி கிராமத்தைச் சேர்ந்த வினோத், ராகுல், பிரபாகரன், செங்குட்டுவன் ஆகியோரிடம் பேசினோம்.

``மயிலாடுதுறை வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் கருத்து கேட்க வந்தாங்க. நாங்க சுமார் 200 பேர் கூடியிருந்தோம். 'இங்கிருக்கும் குழாய்களை அப்புறப்படுத்தணும்' என்று ஒருமித்த குரலில் சொல்லிட்டு வந்துட்டோம்" என்றனர்.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்

ஓ.என்.ஜி.சி மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் புதிய பணிகள் தொடங்கவுள்ளதா என்பதையறிய அதன் செய்தி தொடர்பாளர் ராஜ்குமாரை பலமுறை தொடர்புகொண்டும் குறுஞ்செய்தி அனுப்பியும் பதிலில்லை. அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால், அதை வெளியிட தயாராகவே இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism