Published:Updated:

சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை முடிவு! நீதி மன்றத்தில் தகவல்!

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை முடிவு! நீதி மன்றத்தில் தகவல்!

சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.

Published:Updated:
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ 2015, செப்டம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. நிறைவாக, 2017 ஜனவரி 10-ம் தேதியன்று, ‘13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக்கோரி வைகோ வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதி அறிவித்தார்.

சீமைக்கருவேல மரங்கள்
சீமைக்கருவேல மரங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, சீமைக் கருவேல மரங்களை அழிப்பது அவற்றைச் சார்ந்து இருக்கும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரிய இழப்பாக அமையும் என்றும், எனவே சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை 2017 ஏப்ரல் 27-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ‘‘தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு விதித்த தடையை நீக்கியது உயர் நீதிமன்ற முழுஅமர்வு. முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை மாநகராட்சி அகற்ற வேண்டும். மேலும் தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நிலத்தின் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். தனியார் இடங்களில் அகற்றவில்லை என்றால் அரசே அதை அகற்றி, அதற்கான செலவுத் தொகை போல் இரண்டு மடங்குத் தொகையை நிலத்தின் உரிமையாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

‘சீமைக்கருவேல மரங்கள்
‘சீமைக்கருவேல மரங்கள்

இந்த வழக்கு மீண்டும் 2022 ஏப்ரலில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும். 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தனர்.

சீமைக்கருவேல மரம்
சீமைக்கருவேல மரம்

சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தது.

``சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூற முடியாது. அதேநேரம், அந்நிய மரங்களை அகற்றும் பணியில் தனியாரை ஏன் ஈடு படுத்தக்கூடாது?” என வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.