Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் சூழலியல் அனுமதிக்காகக் காத்திருக்கும் 11 குவாரிகள்!

குவாரி
குவாரி ( Pixabay )

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான சூழலியல் அனுமதிகளைப் பெறுவதற்காக பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இரண்டு கிரானைட் குவாரிகள் உட்படப் பதினொரு குவாரிகளை அமைக்கத் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சூழலியல் அனுமதிகளைப் பெறும் முயற்சியில் இருந்தது. அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இறுதிக்கட்டம்வரை வந்துள்ளது.

கிரானைட்
கிரானைட்
Pixabay

2016-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புபடி, அனைத்து சுரங்கங்களும் குவாரிகளும் சூழலியல் அனுமதிகளைப் பெற்ற பிறகே தொடங்கப்பட வேண்டும். அதன்படி 11 குவாரிகளைத் தமிழகத்தில் அமைக்கச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய, மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் குறிப்பாணை (ToR) பெற்றிருந்தது. அதில், ஏழு திட்டங்களுக்கு மக்கள் கருத்து வரை கேட்டு முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுக்கான இறுதிக்கட்ட சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் சூழலியல் அனுமதிகள் கிடைப்பதுதான் மிச்சம். கறுப்பு கிரானைட்டுகளுக்காகத் தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்திடம் 750.95 ஹெக்டேர்களில் 48 குத்தகைகளும் மற்ற கிரானைட்டுக்காக 642.665 ஹெக்டேர்களில் 40 குத்தகைகளும் இருக்கின்றன. தற்போது தமிழகத்தில் இருக்கும் 10 சுரங்கங்கள் மற்றும் குவாரிக்களை 25 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மூடப்பட்ட குவாரிகளை உரிய சூழலியல் அனுமதிகளைப் பெற்று திறப்பதற்கான முயற்சிகளில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை இருக்கிறது.
சி.வி.சண்முகம், சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் (சட்டசபையில் பேசியபோது).

இப்போது தமிழகத்தில் சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முழுக்க 870 குத்தகைதாரர்கள் 3092.08 ஹெக்டேர்களில் குவாரிகளை இயக்கி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு