Published:Updated:

திருவாரூர்: ``மாவட்ட நிர்வாகம் அனுமதி; மீண்டும் பணியை தொடங்குகிறதா ஓ.என்.ஜி.சி?" - அச்சத்தில் மக்கள்

திருவாரூர்
News
திருவாரூர்

மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், (13/12/22) அன்று காலை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மிகப்பெரிய இயந்திரங்களை, அந்தப் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தியதால், மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

திருவாரூர்: ``மாவட்ட நிர்வாகம் அனுமதி; மீண்டும் பணியை தொடங்குகிறதா ஓ.என்.ஜி.சி?" - அச்சத்தில் மக்கள்

மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், (13/12/22) அன்று காலை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மிகப்பெரிய இயந்திரங்களை, அந்தப் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தியதால், மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Published:Updated:
திருவாரூர்
News
திருவாரூர்

டிசம்பர் 10-ம் தேதி, ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிராமத்தில், ஏற்கெனவே ஓ.என்.ஜி.சி வசம் இருந்த கிணறுகளைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், ஓ.என்.ஜி.சி அதற்கான பணிகளைத் தொடங்க ஆயத்தமானபோது அந்தப் பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டங்கள் நடத்தினர். அதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

2008-ம் ஆண்டு, அடியக்கமங்கலம் கிராமத்தில் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளைத் தொடங்கியது ஓ.என்.ஜி.சி. குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் நிலத்தடி நீர் வந்துவிட்டதால், வெட்டப்பட்ட கிணறுகள் 2018-ல் கைவிடப்பட்டன. கடந்த ஜூலை மாதம், ஓ.என்.ஜி.சி சார்பில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய அளவில் குளம் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணிகள் மக்கள் போராட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர்: ``மாவட்ட நிர்வாகம் அனுமதி; மீண்டும் பணியை தொடங்குகிறதா ஓ.என்.ஜி.சி?" - அச்சத்தில் மக்கள்

மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், (13/12/22) அன்று காலை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மிகப்பெரிய இயந்திரங்களை, அந்தப் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தியதால், மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதனால், பணிகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைவர் தா.ஜெயராமனிடம் பேசினோம். நம்மிடம் பேசியவர், ``பொதுவாகக் கிணறுகளின் பராமரிப்பு பணிகளுக்கு 7 நாள்களே போதுமானது. புதிய கிணறுகளை அமைக்கவே 4 வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகும். பராமரிப்பு பணிகளுக்கு ஏன் 3 மாதங்கள் ஆகப்போகிறது? திறந்த வெளியாக இருந்த மைதானத்தைச் சுற்றியும் அடைப்புகள் அமைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கையில் புதிய கிணறுகள் வெட்டும் முயற்சியில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் ஈடுபடுகிறதோ? என்ற கேள்வி ஏற்படுகிறது.

தா.ஜெயராமன்
தா.ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் 2020-ன் படி, புதிய பணிகள் எதுவும் தொடங்க முடியாது. அதனால், ஏற்கெனவே கிணறுகள் இருக்கும் வளாகத்தில் புதிய கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி திட்டமிட்டிருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. டிசம்பர் 10-ம் தேதி ஓ.என்.ஜி.சி சார்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அடுத்த நாள், நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர், ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி வழங்கிவிட்டார். மிகப்பெரிய இயந்திரங்களின் வருகை, போலீஸார் குவிப்பு என... என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில், அந்தப் பகுதி மக்கள் அச்சத்திலும், குழப்பத்திலும் இருக்கின்றனர். தொலைக்காட்சி செய்திகளின் மூலமாகவே இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதி மக்களுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது என்றால், அது தொடர்பான ஆவணங்கள் குறிப்பாக EIA (Environment Impact Assessment report ) போன்ற ஆவணங்களை மக்களிடம் அளித்துவிட்டு, முன்னரே தகவலைத் தெரிவித்து விட்டு பணியை மேற்கொள்ளட்டும்" என்றார்.