Published:Updated:

`மாசில்லா தேசம் 2020; நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்!'- தேனி அமைப்பின் பாசிட்டிவ் முயற்சி

தேனி தன்னார்வலர்கள்
தேனி தன்னார்வலர்கள்

நாடு முழுவதிலும் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் தொடர்பாக இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கு மத்தியில் சற்று வித்யாசமாகவும் அதே நேரம் பயனுள்ள வகையிலும் இயங்கும் தேனியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு `மழைத்துளி பவுண்டேஷன்’. இவர்களின் சமீபத்திய சாதனை தேனி சின்னக்குளம் கண்மாயைத் தூர்வாரி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களுக்கு பாசன வசதிக்கு வழிவகுத்தது.

மரம் நடுதல்
மரம் நடுதல்

அடுத்ததாக, நாடு முழுவதிலும் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளனர். மழைத்துளி பவுண்டேஷனின் நிறுவனர் சத்குருவிடம் பேசினோம். ``நான் முன்னாள் ராணுவ வீரன். எனக்கு நாடு முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர். அவர்களையும், ஆங்காங்கு உள்ள தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்களை இணைத்து, புத்தாண்டின் முதல் நாளில் மரக்கன்றுகள் நடலாம் எனத் திட்டமிட்டோம்.

அப்துல் கலாமின் கனவு வருடம் இது. அதனால், குழந்தைகள், மாணவர்களை வைத்து மரக்கன்றுகள் நட முடிவு செய்தோம். டெல்லி, அருணாசலப் பிரதேசம், சென்னை, தூத்துகுடி, கான்பூர், என நாட்டின் முக்கியப் பகுதிகளில் இன்று காலை மரக்கன்றுகள் நடப்பட்டன. தேனியில் எம்.சுப்புலாபுரம், லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சத்குரு
சத்குரு

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் கடந்த ஆண்டு மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு ஒரு வாரம் விடுமுறை விட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஒரு மாதம் விடுமுறை விடும் சூழல் ஏற்படும். டெல்லிதானே என நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மரங்களின் எண்ணிக்கை குறைவானதே காற்று மாசுபாடு அதிகரிக்க காரணம். அதனால்தான் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன.

`புதர்மண்டிக் கிடக்கும் எம்.ஜி.ஆரின் கனவு!'- சண்முகா நதியால் கலங்கும் தேனி கிராமங்கள்

பள்ளி விடுமுறை என்பதால், சில நகரங்களில் மரக்கன்றுகள் நடமுடியவில்லை. பள்ளி திறந்ததும், நாடு முழுவதிலும் மழைத்துளி பவுண்டேஷன் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுவார்கள். பிறந்தநாள், திருமண நாளில் ஒருவர் ஒரு மரம் நட்டால் போதும், வருட இறுதியில் நம் மக்கள் தொகைக்கு ஈடான மரங்கள் இந்தியா முழுவதிலும் இருக்கும். மாசில்லா தேசமாக இந்தியா மாறும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு