Published:Updated:

போராட்டங்களால் எங்களுக்கு 200 கோடி நஷ்டம்; ஒ.என்.ஜி.சி சொல்ல வருவது என்ன?

ஓ.என்.ஜி.சி

காவிரி படுகையை பொருத்தவரை தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் ஓ.என்.ஜி.சி சந்தித்து வருகிறது. இதனால் ரூ.200 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

போராட்டங்களால் எங்களுக்கு 200 கோடி நஷ்டம்; ஒ.என்.ஜி.சி சொல்ல வருவது என்ன?

காவிரி படுகையை பொருத்தவரை தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் ஓ.என்.ஜி.சி சந்தித்து வருகிறது. இதனால் ரூ.200 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

Published:Updated:
ஓ.என்.ஜி.சி

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஓ.என்.ஜி.சி குழாய்கள்
ஓ.என்.ஜி.சி குழாய்கள்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற எரிவாயுக்களை பூமியிலிருந்து எடுக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக விவசாய நிலங்களில் குழாய்களை பதித்து எரிவாயுவை எடுத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல இடங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணிகளுக்கு தடையை ஏற்படுத்தி வருகின்றனர். புதிதாக கிணறுகள் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று காரைக்கால் ஓ.என்.ஜி.சி காவிரிப் படுகை நிர்வாக அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஓ.என்.ஜி.சியின் பல்வேறு துறை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.என்.ஜி.சி. காவிரிப் படுகை மேலாளர் அனுராக் சர்மா தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

"மக்கள் சேவையில் அர்ப்பணிப்போடு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி. உலக தரவரிசை பட்டியலில் 25-ஆவது இடத்தை பெற்றுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காலத்திலும் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் அயராது உழைத்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள விந்தியன் படுகையை 8-ஆவது பெரிய புதிய கண்டுபிடிப்பாக நாட்டுக்கு அர்ப்பணித்தது.

அனுராக் சர்மா
அனுராக் சர்மா

ஆனால், காவிரி படுகையை பொறுத்தவரை தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் ஓ.என்.ஜி.சி சந்தித்து வருகிறது. இதனால் ரூ.200 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கிறோம். இது மக்களுக்கு சென்று சேர வேண்டிய நிதியாகும். ஆக்கப்பூர்வமாக செயல்பட அனுமதித்திருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

புதிய கிணறுகள் அமைப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, இங்கிருந்து இயந்திரங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிர்வாகம் திறம்பட செயல்படுவதில்தான் மக்கள் நலன் உள்ளது" என்று பேசியுள்ளார்.