Published:Updated:

வன மக்களும் புலிகளுமா அல்லது யுரேனியமா... என்ன செய்யப் போகிறது அரசு?

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம், அம்ராபாத்  புலிகள் காப்பகம். இந்தியாவின் முதல் இரண்டு பெரிய புலிகள் காப்பகங்களும் நல்லமலா காடுகளில் உள்ளன. இப்போது, அணுமின்நிலையத்தின் முக்கிய எரிபொருளாக இருக்கும் யுரேனியம் சுரங்கமாக மாறுகிறது, இந்த அம்ராபாத் காப்பகம்.

அம்ராபாத் காப்பகம்
அம்ராபாத் காப்பகம்

தமிழ்நாட்டில் நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம் அணுமின்நிலையம் போன்று பல வளர்ச்சிக்கான திட்டங்கள் என அரசால் கொண்டு வரப்படுகின்றன. நாட்டைச் செழிப்படைய வைக்கும் இத்திட்டங்கள், மக்கள் வாழ்வாதாரத்திலும் இயற்கை மடியிலும் கை வைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அப்படியொரு திட்டம் இப்போது ஆந்திராவில் கொண்டுவரப்பட்டு விவாதத்தை எழுப்பியிருக்கிறது. ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களை இணைக்கும் நல்லமலா காடுகளைக் குறிவைத்துதான் இந்தப் புதிய திட்டம் வரவிருக்கிறது.

`இந்திய அளவில் மிகச் சிறந்த காப்பகம்!' - சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு விருது

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகம் அம்ராபாத் புலிகள் காப்பகம். இந்தியாவின் முதல் இரண்டு பெரிய புலிகள் காப்பகங்களும் நல்லமலா காடுகளில் உள்ளன. இப்போது அணுமின்நிலையத்தின் முக்கிய எரிபொருளாக இருக்கும் யுரேனியம் சுரங்கமாக மாறுகிறது இந்த அம்ராபாத் காப்பகம். 2030-க்குள் 40,000 மெகாவாட் அணுமின் சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா குறிவைக்கிறது, தற்போது உள்ள அணுமின் நிலையங்கள் மூலம் 6780 மெகா வாட் உற்பத்தியை, ஆறு மடங்காகப் பெருக்க யுரேனியம் எரிபொருளின் தேவை அதிகமாகிவிட்டது. அதனை சமன்படுத்தத்தான் இந்த அம்ராபாத் யுரேனியம்.

உலகில் உள்ள மொத்த புலிகளில், 70 சதவிகிதம் வாழ்வது இந்தியாவில்தான். 2006-ல் 1411 ஆக இருந்த எண்ணிக்கை, Project Tiger மூலமாக 2967 அக உயர்ந்தது. ஆனால், உலகில் உள்ள ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையே 3890 தான். அப்படி புலிகளைக் காப்பாற்றிய காப்பகத்தை 2016-ம் ஆண்டு யுரேனியம் சுரங்க வேலைகளுக்குத் தர மாநில வனப்  பாதுகாப்பகம் பச்சைக்கொடி காட்டியது. ஆனால் 2017-ம் ஆண்டு, யுரேனியம் சுரங்க எதிர்ப்புப் போராட்டக் குழு , இதனை எதிர்த்து போராட்டம் செய்தது. அதற்கு முக்கியக் காரணம்-புலிகளும் செஞ்சு மலைவாழ் மக்களும்தான்.

செஞ்சு மலைவாழ் மக்கள்
செஞ்சு மலைவாழ் மக்கள்

செஞ்சு மலைவாழ் மக்கள்

நல்லமலா காடுகளை வாழ்விடமாய்க் கொண்டவர்கள் செஞ்சு மலைவாழ் மக்கள். இவர்களுக்கு வேட்டையே பிரதான தொழிலாகும். வேட்டையாடியும் காட்டில் கிடைக்கும் உணவுகளையும் கொண்டுதான் இவர்கள் காலங்காலமாக வாழ்ந்துவருகிறார்கள். இந்தக் காடுகளில் 83 ச.கி.மீ பரப்பளவில் கிடைக்கும் யுரேனியத்தை எடுப்பதற்காக, இந்த மலைவாழ் மக்களைத் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப் பல முயற்சிகள் செய்தது யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யு.சி.ஐ.எல்).

"மலைகளை நாசப்படுத்துகிறார்கள்" என்று அவர்கள் மேல் பழி சுமத்தி, அவர்களை காட்டை விட்டு விரட்டி, அந்த இடத்தை யுரேனியம் சுரங்கமாக மாற்ற தீவிர முயற்சி செய்யப்படுகிறது. இதற்காகப் பல தன்னார்வலர்களின், மக்களின் கண்டனங்களை வாங்கிக்கொண்டது இந்தக் குழு. அப்படியிருந்தும் 2019 மே மாதம், வன ஆலோசனைக் குழுவின் (State Board of Wildlife) அனுமதி வாங்கி யுரேனியம் சுரண்ட வேலைகளைத் தொடங்கவிருக்கிறது. இது, சுமார் 430 குடும்பங்களைக்கொண்ட செஞ்சு மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. தங்கள் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்று புலம்புகின்றனர், அந்த வன-நாகரிக மனிதர்கள்.

யுரேனியன் சுரங்கம்
யுரேனியன் சுரங்கம்

கையொப்பப் பிரசாரம்

இந்த அதிகாரச் சுரண்டலைத் தடுக்க மற்றும் வனமக்கள், புலிகளின் வாழ்வை மேம்படுத்த, ‘ஹைதராபாத் புலி பாதுகாப்பு சமூகம் (Hyderabad Tiger Conservation Society (HyTiCoS)) ஒரு கையொப்பப் பிரசாரம் (Signature Campaign ) ஒன்றை முன்வைத்தது. புலிகளின் நலனுக்காக, சர்வதேசப் புலிகள் தினமான ஜூலை 29,2019 அன்று, இதனை முன்னெடுத்தது. இந்த யுரேனியம் சுரண்டலுக்காக 42 கிராமங்களைச் சேர்ந்த 70,000 மக்கள், தங்கள் இருப்பை விட்டு வெளியேறும் நிலை உண்டாகும்.

மக்களின் நலனுக்காகத்தான் முன்னேற்றத் திட்டங்கள் இருக்க வேண்டுமேயன்றி, மக்களின் வாழ்வாதாரத்தின்மீது நின்று வளர்ச்சியை அடையக்கூடாது. அந்த வன மக்கள் மற்றும் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே முக்கியம்.