Published:Updated:

மரம் வெட்டியவர் மீது பாய்ந்தது வழக்கு! - திருப்பூர் போலீஸ் அதிரடி

வெட்டப்பட்ட மரம்
வெட்டப்பட்ட மரம்

திருப்பூரில் மரத்தை வெட்டிய குற்றத்துக்காக, ஒருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், கே.வி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், தன் வீட்டின் முன்பு இருந்த வயது நிறைந்த மரத்தை, சொந்தப் பயன்பாட்டுக்காக வெட்டியுள்ளார்.

திருப்பூர் காவல் ஆ ணையர் அறிக்கை
திருப்பூர் காவல் ஆ ணையர் அறிக்கை

இது குறித்த தகவல் கிடைத்ததும் `வனத்துக்குள் திருப்பூர்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் தெற்கு வட்டம் கிராம நிர்வாக அலுவலர் சதிஷ்குமாரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். மேலும், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Vikatan

இதையடுத்து மத்திய காவல்துறையினர், இந்திய தண்டனை சட்டம் (IPC) 379 பிரிவின் கீழ் மரத்தை வெட்டிய குற்றத்துக்காக, அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். "சாலை விரிவாக்கப் பணிகள், மின்சார வாரிய பணிகளுக்காக என்று எதற்காக மரத்தை வெட்ட வேண்டும் என்றாலும் உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய்த்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூரில் உள்ள மரங்களைப் பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு