Published:Updated:

பட்ஜெட் 2022: "சுற்றுச்சூழல் பார்வையில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது!"- பூவுலகின் நண்பர்கள்

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தற்போது வெளியாகி இருக்கிற பட்ஜெட் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் 2022: "சுற்றுச்சூழல் பார்வையில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது!"- பூவுலகின் நண்பர்கள்

தற்போது வெளியாகி இருக்கிற பட்ஜெட் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசின் பட்ஜெட் இன்றைக்கு தாக்கல் செய்யப்பட நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் பட்ஜெட் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சூழலியல் சார்ந்த தன்னார்வ அமைப்பான பூவுலகின் நண்பர்கள் பட்ஜெட் மீதான தங்களுடைய பார்வையை முன்வைத்திருக்கின்றனர்.

கிளாஸ்கோ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். அவற்றை செயல்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. நிதிநிலை அறிக்கை ஒரு புறம் காலநிலை மாற்றம், சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டு இன்னொருபுறம் நதிநீர் இணைப்பு திட்டம், 25,000 கி.மீ புதிய நெடுஞ்சாலை திட்டம், அணை கட்டுமானம் எனச் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வர இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பூவுலகின் நண்பர்களின் அறிக்கையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விமர்சனங்கள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

1. திட்டங்களுக்கான அனுமதி பெற ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய அமைப்புகளான மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை, கடலோர ஒழுங்காற்று வாரியம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் இதன் மூலம் நீர்த்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நடவடிக்கை நாடாளுமன்ற குழுவில் நிராகரிக்கப்பட்ட TSR.சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரையின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை செயல்படுத்த முனைகிறது ஒன்றிய அரசு.

2. சூரிய ஆற்றல் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த திட்டங்கள் வர்த்தகம் சார்ந்த திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

3. காலநிலை மாற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Conservation) தொடர்பான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

4. நதிநீர் இணைப்பு குறித்தான அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை அமைப்புகள் மாறிவருகின்ற சூழலில் நதிநீர் இணைப்பு திட்டம் என்பது நிலத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் வன்முறையாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5. WRI-World Resource Institute வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 2014-2018 வரை பா.ஜ.க ஆட்சி காலகட்டத்தில் இந்தியாவில் அழிக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை சுமார் 1.2 லட்சம் ஹெக்டர். இந்த நிலையில் 25,000கி.மீ தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

6. ‘கிளாஸ்கோ’ மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்த பஞ்சமிர்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான கொள்கைகள், விதிமுறைகள் போன்றவை அறிவிக்கப்படவில்லை.

7. இந்தியாவில் அதி ஆற்றல் கொண்ட சூரிய மின்தகடுகளை உற்பத்தி செய்வதற்கான, 'செயலாக்கத்தின் மூலமான ஊக்கத்தொகை' (Performance linked incentive) மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உதவும். இது ஒரு மேம்போக்கான அறிவிப்பு.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

8. கங்கை நதிக்கரையை ஒட்டி இயற்கை வேளாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தும் அமைப்புகள், திட்டங்கள் குறித்தான விவரங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

9. சுகாதாரத் துறைக்கு போதிய நிதி அதிகரிப்பு இல்லாததைப் பார்க்கும்போது, கோவிட் போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து அரசு இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

10. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீட்டை குறைத்திருப்பது கிராமப்புற பொருளாதாரத்தை முழுவதும் சிதைக்கும் வேலையே. மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை சுற்றுச்சூழல் பார்வையில் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அறிக்கை மத்திய பட்ஜெட்டை காட்டமாக விமர்சித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism