Published:Updated:

தொடங்கியது காலநிலை மாற்றம் குறித்த மாநாடு! - ஐ.நா-வின் முடிவு என்ன?

மனித இனம் பூமியுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது பூமி மீண்டும் போராடுகிறது. காலநிலை மாற்றம் உலகளாவிய காலநிலை அவசரநிலையாக மாறியுள்ளது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் ( Pixabay )

ஐக்கிய நாடுகள் அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்து மாநாட்டை இன்று (டிசம்பர் - 2) தொடங்கியுள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 2 - 16 தேதி வரை நடக்கவுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடக்கவிருக்கும் இம்மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் அதை வலுப்படுத்துதல் பற்றியும் ஐ.நா முடிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`பிரேசிலில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு, சில மாதங்களுக்கு முன் மாட்ரிட்க்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வை நடத்தி முடிக்க 50 மில்லியன் யூரோ செலவாகும். நிகழ்வின்போது 200 மில்லியன் யூரோ திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று ஸ்பெயின் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா ரிபெரா தெரிவித்தார்.

பசுமை வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும் கார்பன் நடுநிலைமையை 2050-க்குள் கொண்டுவர வேண்டும்.
அன்டோனியா கட்ரீஸ் (Antonio Guterres)
Antonio Guterres
Antonio Guterres

மேலும், இந்த மாநாட்டில் பாரிஸ் காலநிலை மாற்றம் 2015-ல் மிகவும் முக்கியமான சர்ச்சையை ஏற்படுத்திய ஆர்ட்டிகள் 6 (Article 6) குறித்து பேசப்படும் என்றும் இதற்கான தீர்வு இந்தக் கூட்டத்திலேயே காணப்படும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் அக்யோன் இயக்கத்தைச் சேர்ந்த காலநிலை மற்றும் ஆற்றலுக்கான பிரதிநிதி, சேவியர் அணலுஸ் பிரீட்டோ கூறியுள்ளார்.

``பசுமை வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும் கார்பன் நடுநிலைமையை 2050-க்குள் கொண்டு வரவேண்டும்" என்று கூறிய ஐக்கிய நாடுகளின் தலைவர் அன்டோனியா கட்ரீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உலகிலுள்ள அனைத்துத் தலைவர்களும் தங்களது பொறுப்பையும் பங்களிப்பையும் இந்த மாநாட்டில் அளிக்கவேண்டும். இந்தக் காலநிலை மாற்றத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் துரோகமாக அது அமையும். மனித இனம் பூமியுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது பூமி மீண்டும் போராடுகிறது. காலநிலை மாற்றம் உலகளாவிய காலநிலை அவசரநிலையாக மாறியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

காலநிலை மாற்ற மாநாடு
காலநிலை மாற்ற மாநாடு
Antonio Guterres

மேலும், இந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பைக் குறைப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா எடுக்கும் முடிவை, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.