Published:Updated:

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் விரைந்து நடவடிக்கை; உயர் நீதிமன்றம் உத்தரவு! இது சாத்தியமா?

நீர்நிலையில் நீதிமன்றம்

அரசுக் கட்டடங்களே பலவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கின்றன. செம்மஞ்சேரி காவல் நிலையமே நீர்நிலையில்தான் கட்டப்பட்டிருக்கிறது என ஐ.ஐ.டி அறிக்கை கொடுத்திருக்கிறது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் விரைந்து நடவடிக்கை; உயர் நீதிமன்றம் உத்தரவு! இது சாத்தியமா?

அரசுக் கட்டடங்களே பலவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கின்றன. செம்மஞ்சேரி காவல் நிலையமே நீர்நிலையில்தான் கட்டப்பட்டிருக்கிறது என ஐ.ஐ.டி அறிக்கை கொடுத்திருக்கிறது.

Published:Updated:
நீர்நிலையில் நீதிமன்றம்

நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாள் களுக்குள் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பெரும் இடர்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றமே தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்றிவிட்டு அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யக்கூறி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், அவ்வழக்கின் விசாரணை கடந்த ஜூலை 31-ம் தேதி மீண்டும் நடந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதைக் கண்டித்த நீதிபதிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இன்னும் பத்து நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென்று  தெரிவித்திருக்கிறது. 

அறப்போர் ஜெயராமன்
அறப்போர் ஜெயராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம்...

``அரசுக் கட்டடங்களே பலவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கின்றன. செம்மஞ்சேரி காவல் நிலையமே நீர்நிலையில்தான் கட்டப்பட்டிருக்கிறது என ஐ.ஐ.டி அறிக்கை கொடுத்திருக்கிறது. தனியார் நிறுவனங் களின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் எனப் பலவும் நீர்நிலைகளில் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குப் பட்டாவும் வழங்கப்பட்டிருக்கின்றன. சட்ட ரீதியில் மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்பு என்பது ஆக்கிரமிப்புதான். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமான விளைவை நாம் சென்னை பெருவெள்ளத்தில் சந்தித்தோம். நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது முக்கியம் அதே நேரம் இனி இந்த ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள முடியாதபடி வழிவகை செய்வதும் மிக முக்கியமானது. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசுக் கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள் சட்டபூர்வமாக ஆக்கிரமித்திருக்கும் சூழலில், பட்டா இல்லாத ஏழை மக்களின் குடியிருப்புகளை மட்டும் அப்புறப்படுத்துவதில் முறையாக இருக்காது. நீர்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தினால் அந்தப் பகுதியிலேயே அவர்களுக்கு மாற்றிடம் தரப்பட வேண்டும். செம்மஞ்சேரி காவல் நிலையம் இயங்குவதில்லை. அக்கட்டடம் இடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இது தவறு.

தமிழகத்தின் நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள்

நீர்நிலைகளின் சர்வே எண்ணை இணையத்தில் தரவேற்றி, வில்லங்கச் சான்றிதழில் அதைச் சேர்க்க வேண்டும். நீர்நிலைகளாக உள்ள இடங்களைப் பதிவு செய்ய முடியாதபடி தடை செய்ய வேண்டும். இதன் மூலம் சட்டபூர்வமாக நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியும். அரசு உண்மையில் இது குறித்து அக்கறை செலுத்தினால் நிச்சயம் இனி ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ள முடியாத வண்ணம் தடுக்க முடியும். முடிந்த வரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்" என்கிறார் ஜெயராமன்.