Published:Updated:

நீலகிரி: காட்டு யானைக்கு தீ வைத்து சித்ரவதை! - கொடூரர்களைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை

காட்டு யானை

``காயம்பட்ட யானைக்கு உயிரோடு தீ வைத்து சித்ரவதை செய்த கொடூரர்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெருங்குவோம்" என முதுமலை வனத்துறையினர் அதிரடியாகக் களமிறங்கியுள்ளனர்.

நீலகிரி: காட்டு யானைக்கு தீ வைத்து சித்ரவதை! - கொடூரர்களைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை

``காயம்பட்ட யானைக்கு உயிரோடு தீ வைத்து சித்ரவதை செய்த கொடூரர்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெருங்குவோம்" என முதுமலை வனத்துறையினர் அதிரடியாகக் களமிறங்கியுள்ளனர்.

Published:Updated:
காட்டு யானை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பழங்குடியினர் கிராமத்தைச் சுற்றி, கடந்த மாதம் ஆண் காட்டு யானை ஒன்று உலவிவந்தது.

யானை
யானை

ஊர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த ஆண் யானைக்கு முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் பழங்களில் மருந்து மாத்திரைகளைவைத்து யானைக்குக் கொடுத்தனர். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

யானை
யானை

எனவே யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்து கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் காயம்பட்ட யானையைச் சுற்றி வளைத்து, மயக்க ஊசி செலுத்தி, யானையின் அருகில் நெருங்கி கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து தடவி சிகிச்சை அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து அந்த யானையைக் கண்காணித்துவந்தனர். இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்த யானையைப் பார்த்து வனத்துறையினரே கண்கலங்கினர்.

யானை
யானை

இத்தகைய மோசமான காயம் எப்படி ஏற்பட்டது என்பதை யூகிக்க முடியாத வனத்துறையினர், தீவிர‌ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். மேலும், அந்த யானையைப் பிடித்து முதுமலையிலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டனர்.

இதன்படி இரண்டு கால்நடை மருத்துவர் குழுக்கள், நான்கு கும்கி யானைகள் என எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மீண்டும் அந்த யானையைச் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி அருகில் நெருங்கினர். அருகில் சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், யானையின் இடது பக்கப் பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.

யானை
யானை

`அப்பாவியான இந்த யானைக்குத் தீ வைத்து கொடுமையான சித்ரவதைகளை செய்த கொடூரர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என காட்டுயிர் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் குரல்கொடுத்துவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கௌஷல், ``யானையின் இடது காதுப் பகுதியில் தீக்காயங்கள் இருந்தது உண்மைதான். முதுகில் காயத்துடன் அவதிப்பட்டுவந்த யானையின் மீது தீப்பந்தம் போன்றவற்றைக் கொண்டு எரித்திருக்கிறார்கள்.

யானை மீட்புப் பணி
யானை மீட்புப் பணி

இது குறித்து வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்" என உறுதியுடன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism