Published:Updated:

இந்திய சீன எல்லை ரயில்வே திட்டம்; பழங்குடியினரை பாதிக்குமா?

இந்திய-சீனா எல்லையான சேவோக் - ரங்க்போ ரயில் திட்டம்

சீனா இந்த எல்லை வரை ரயில்களை இயக்கித் தனது பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. எனவேதான், இந்தியாவும் அதேபோல் எல்லைக் கோடு வரை ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் வணிக நோக்கம் எதுவுமில்லை. இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்திய சீன எல்லை ரயில்வே திட்டம்; பழங்குடியினரை பாதிக்குமா?

சீனா இந்த எல்லை வரை ரயில்களை இயக்கித் தனது பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. எனவேதான், இந்தியாவும் அதேபோல் எல்லைக் கோடு வரை ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் வணிக நோக்கம் எதுவுமில்லை. இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

Published:Updated:
இந்திய-சீனா எல்லையான சேவோக் - ரங்க்போ ரயில் திட்டம்

மேற்கு வங்கம், கலிம்போங்க் மாவட்டம், டீஸ்டா பஜார் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது ஜஸ்மயா ராய், தற்போது நடைபெற்று வரும் சேவோக் - ரங்க்போ ஐஆர்சிஓஎன் ரயில்வே திட்டத்தால் தனது வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடுமோ எனக் கவலைப்படுகிறார்.

 ஜஸ்மயா ராய்
ஜஸ்மயா ராய்

இப்போது போடப்பட்டு வரும் 45 கி.மீ நீள ரயில் பாதை 14 சுரங்கப்பாதைகள், 28 மேம்பாலங்கள் ஊடே, மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங்க் மற்றும் காலிம்போங்க் மாவட்டங்கள் வழியே சிக்கிம் பாக்யோங்க் மாவட்டம் ரங்க்போவை அடையும். கஞ்சன்ஜுங்கா மலைத்தொடரின் அடிவாரத்திலுள்ள செங்குத்தான நிலப்பரப்பு வழியே, என்ஹெச்-10 மற்றும் டீஸ்டா ஆற்றை ஒட்டியவாறு ரயில் பாதை அமையும்.

45 கி.மீ ரயில்வே பாதையிலுள்ள 24 கிராமங்களில் வாழும் 40,000 -க்கும் அதிகமான மக்களின் வீடுகளை பாதிக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது. 2006 வன உரிமைச் சட்டம் (எஃப்ஆர்ஏ) இந்தப் பிராந்தியத்துக்குப் பொருந்தாது என ரயில்வே துறை அறிவிக்கவே, வனம் /மலைவாழ் மக்கள் தங்களது நிலவுரிமைத் தீர்வுகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மலையைக் குடையும்போது ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்து ஐஆர்சிஓஎன் திட்ட இயக்குநர் மோஜிந்தர் சிங்க் கூறுகையில், ``ரயில்கள் சுரங்கப் பாதைகள் வழியே செல்வதால் எதுவும் நிகழாது. மலையைக் குடையும் போது ஏற்படுவதாகச் சொல்லப்படும் அதிர்வுகள் இனியும் ஏற்படாது. வீடுகளில் ஏற்படும் சேதாரங்களுக்குப் பாறைகளை வெடிப்பதும், மலையைக் குடைவதுமே காரணம் என்பதில் உண்மை இல்லை. சுரங்கப் பாதைகளைத் துல்லியமாகத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளோம். அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை'' என மறுத்தார்.

சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்
சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்

டீஸ்டா பஜார் கிராம சபாவின் உறுப்பினர் ஜே.பி.சேட்ரி தொடர்ந்து பேசுகையில் ``ரயில்களை இயக்குவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சொல்லப் போனால் ரயில்களால் உள்ளூர் மக்களும் பயன் பெறுவார்கள். உரிமைகளுக்காக மட்டுமே போராடுகிறோம். தற்போது நிலவுரிமைத் தீர்வுகள் மறுக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஏதேனும் பேரழிவு நிகழும் பட்சத்தில், எந்த நிவாரணமும் கிடைக்காமல் போய்விடும். நாங்கள் கேட்பதெல்லாம் சேதாரத்துக்கான இழப்பீடும், மறுவாழ்வும்தான். திட்டப் பணிகளின்போது ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஐஆர்சிஓஎன் திட்டப் பொறுப்பாளர் உறுதி அளித்திருந்தார். ஆனால், சில அதிகாரிகள் நில ஆய்வுக்காக எங்கள் கிராமத்துக்கும் வர்த போது விரிசலடைந்த வீடுகளைப் பார்த்து அவை சிறு பிரச்னைகள் என்பதால் இழப்பீடு வழங்க மறுத்தனர்'' என்றார்.

மறுவாழ்வு கோரி விண்ணப்பித்தபோது, தொகுதி மேம்பாட்டு அதிகாரி, துணைக் கோட்ட அதிகாரி மற்றும் கோட்டக் குற்றவியல் நீதிபதி ஆகியோரை அணுகி நிவாரணம் பெறலம் என்றனர். ஆனால் அவர்களோ காட்டு இலாகா மற்றும் நிலச் சீர்த்திர்த்த அதிகாரிகளைச் சந்திக்குமாறு சொன்னார்கள். ஐஆர்சிஓஎன் ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரயில்வேதானே இழப்பீடு வழங்க வேண்டும்? மறுவாழ்வுக்காக ஏன் மற்றவர்களை நாடிச் செல்ல வேண்டும்?’ என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி.

செவோக்கில் தொடங்கி, ரியாங், டீஸ்டா பஜார் மற்றும் மெல்லி நிலையங்கள் வழியாக ரங்போவை அடையும்  பாதை
செவோக்கில் தொடங்கி, ரியாங், டீஸ்டா பஜார் மற்றும் மெல்லி நிலையங்கள் வழியாக ரங்போவை அடையும் பாதை

டார்ஜீலிங்க் மலைப் பகுதியில் 2006 எஃப்ஆர்ஏ அமலாக்கப் போராட்டம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. வனக் கோட்டங்களில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு வனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கான பிரத்யேக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காட்டுப் பகுதிகளில் எந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பும் கிராம சபாக்களின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். ஆனால், ரயில்வே துறை எந்த அனுமதியையும் கிராம சபாக்களிடம் பெறவில்லை.

சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்
சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்

டார்ஜீலிங்க், கலிம்பாங்க், கர்சியாங்க் நகராட்சிகளுக்கான தேர்தல்கள் கடைசியாக 2000-ல் நடைபெற்றன. 2005-ல் மீண்டும் தேர்தல்கள் நடைபெறாத சூழலில் இந்தப் பஞ்சாயத்துகள் பிரதிநிதித்துவமின்றி உள்ளன. எனவே, இப்பகுதிகளில் எஃப்ஆர்ஏ அமலாக்கத்தைக் கோரும் கிராம சபாக்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரமோ, அதிகாரமோ இல்லை.

மலைவாழ் மற்றும் வனப் பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அதீதியைச் சரி செய்ய 2006 எஃப்ஆர்ஏ திருத்தங்களை 2017-18 -ல் மலைவாழ் பழங்குடியினருக்கான அமைச்சகம் வெளிட்ட போதுதான் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. மேற்கு வங்க அரசின் முன்மொழிவு, 1980 வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழுள்ள வன ஆலோசனைக் குழு மற்றும் வன அதிகாரம் பெற்ற குழு ஆகியவை எடுத்த முடிவுகளின் அடிப்படையில், 2017 நவம்பரில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம் திட்டத்துக்கான `முதல் கட்ட ஒப்புதலை’ வழங்கியது. இதற்கான கடிதம் வடகிழக்கு எல்லை ரயில்வே துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்
சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்

‘அதுவரை, ஐஆர்சிஓஎன் தங்களுக்கு வன அனுமதிச் சான்றிதழ் எதுவும் வரவில்லை என்று கூறியது உண்மைதான். ஆனால், ஐஆர்சிஓஎன் நிறுவனத்துக்குத் திடீரென `கொள்கை அடிப்படையில் முதற்கட்ட அனுமதிச் சான்றிதழ்’ கிடைக்கவே பணிகளைத் தொடங்கினர். இரண்டாம் கட்ட அனுமதிச் சான்றிதழ் இன்னும் கிடைக்காத நிலையில் 60% கட்டுமானப் பணிகளையும் ரயில்வே ஏற்கெனவே முடித்துவிட்டது. இது எஃப்ஆர்ஏ சட்ட விதி மீறலாகும்’ என்கிறார் சுற்றுச்சூழல் மற்றும் வன உரிமைச் செயற்பாட்டாளர் சௌமித்ரா கோஷ்.

எஃப்ஆர்ஏ சட்ட விதி மீறலா?

முதற்கட்ட எஃப்சிஏ அனுமதியைப் பெற விண்ணப்பிக்கும் போது எஃப்ஆர்ஏ அனுமதி நடைமுறை தொடங்கப்பட்டதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மத்திய மலைவாழ் மற்றும் பழங்குடியினர் அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தம் ஆகும். ஆனால் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம் இந்த விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை.

சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்
சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்

2019 -ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம், முதற்கட்ட அனுமதி அல்லது ‘கொள்கை அடிப்படையிலான’ வன அனுமதிகளை வழங்க எஃப்ஆர்ஏ விதிகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று தெரிவித்தது. மத்திய மலைவாழ் மற்றும் பழங்குடி அமைச்சகம் இதனைக் கடுமையாக ஆட்சேபித்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கிராம சபாக்களின் அதிகாரத்தைக் குறைத்துவிடும் எனத் தெரிவித்தது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும்..

சேவோக்-ரங்க்போ ரயில் திட்டம் மத்திய மலைவாழ் பழங்குடி அமைச்சகத்தின் அச்சத்தை நிஜமாகி உள்ளது. 2018இல் கூர்க்கா பிராந்திய நிர்வாகம் என்னும் தன்னாட்சி அமைப்பு சேவோக் - ரங்க்போ ரயில் திட்டத்துக்கு தனது தடையில்லாச் சான்றிதழை அளித்தது. பஞ்சாயத்துகள் இல்லாத நிலையில், கிராம சபாக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இச்சான்றிதழை வழங்கி உள்ளது. அதே சமயம் எஃப்ஆர்ஏ சட்டத்துக்கு உட்பட்டு கூர்கா பிராந்திய நிர்வாகம் வனம் / மலைவாழ் மக்களுக்கு எந்த நிலவுரிமைத் தீர்வையும் வழங்கவில்லை.

சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்
சேவோக் - ரங்க்போ ரயில்வே திட்டம்

1850 -ல் பிரிட்டிஷ் அரசு மலேரியா சிகிச்சைக்கான க்வினைன் மருந்துக்காகச் சின்சோனா மூலிகைத் தோட்டத்தை உருவாக்கியது. சுரங்கப் பாதை 14 ரயில்வே திட்டம் இந்த சின்சோனா மூலிகைத் தோட்டம் வழியே செல்வதால் இந்தியாவின் ஒரே சின்சோனா மூலிகைத் தோட்டம் அழியும் அபாயத்தில் இருப்பதாக இங்கு வேலை செய்யும் 100 க்கும் அதிகமான குடும்பங்கள் கவலைப்படுகின்றன.

'‘மூன்று வடகிழக்கு எல்லை ரயில்வே திட்டங்களில் ஒன்றான சேவோக்-ரங்க்போ ரயில்வே திட்டம் இந்திய ரயில்வே வலையமைவை, இந்திய-சீன எல்லையைப் பிரிக்கும் உண்மையான எல்லைக் கட்டுப்பாடுக் கோடு வரை நீட்டிக்கும். சீனா இந்த எல்லை வரை ரயில்களை இயக்கித் தனது பாதுகாப்பை வலுப்படுத்தி உள்ளது. எனவேதான் இந்தியாவும் அதேபோல் எல்லைக் கோடு வரை ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் வணிக நோக்கம் எதுவுமில்லை. இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. ஐந்து மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ராணுவதினரை எல்லைக் கோடு வரை விரைந்து அழைத்துச் செல்லலாம்’' என்றார் ஓர் அதிகாரி.

- ஜனனி ரமேஷ்