Published:Updated:

தமிழகத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்! - ஒரு சுற்றுச்சூழல் பார்வை

வேதாந்தா நிறுவனம்

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான அனுமதி கேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & காஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்! - ஒரு சுற்றுச்சூழல் பார்வை

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான அனுமதி கேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & காஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது.

Published:Updated:
வேதாந்தா நிறுவனம்

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி கேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & காஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. மீனவ, விவசாய மக்களின் வாழ்வாதாரம், கடல்வளம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பல்வேறு அரசியல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

வேதாந்தா விண்ணப்பம்
வேதாந்தா விண்ணப்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் எட்டு கடல் பகுதிகள், 23 நிலப்பகுதிகள் என மொத்தம் 31 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான உரிமம் வழங்கும் ஒப்பந்தத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், மீத்தேன், ஷேல் காஸ், ஹைட்ரோகார்பன் எனத் தனித்தனியாகப் பெற்றுவந்த உரிமங்களுக்கு பதில், `திறந்த ஏக்கர் உரிமக் கொள்கை' (Open Acreage Lincensing Policy - OALP) என்ற ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தது. அதன்படி, 2018-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் 55 இடங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்விடப்பட்டது. அவற்றில், தமிழகத்தில் உள்ள இரண்டு இடங்களை வேதாந்தா நிறுவனமும், ஓர் இடத்தை ஓ.என்.ஜி.சி பொதுத்துறை நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன. குறிப்பாக, முதற்கட்ட ஏலத்தில், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரையிலான 1,794 சதுர கி.மீ ஆழமற்ற கடற்பகுதிகளிலும், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2,674 சதுர கி.மீ நிலப்பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போதே, இதற்குத் தமிழகத்திலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ``விளைநிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகளின் நலன், அப்பகுதியில் வாழும் மக்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என்று வாழ்வாதாரத்துக்கும் உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்வது கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல!

முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

எனவே, வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும், அடங்கா சினத்தையும் சந்திக்கவேண்டிய கட்டாயமான நிலை உருவாகும் என்று மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, `தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை'க் காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு கருதியும் இந்தத் திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு உடனே கைவிட வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தமான கோரிக்கையை தமிழக அரசு வைக்க வேண்டும்!" என வலியுறுத்தினார்.

கெய்ர்ன் இந்தியா
கெய்ர்ன் இந்தியா

அந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனம், தான் ஏலத்தில் எடுத்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. அதன் பிறகு, மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என விதிமுறைகளை மாற்றியமைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி கேட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. அதில், தமிழகத்தின் விழுப்புரம், புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் 102 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கவும், நாகப்பட்டினம், காரைக்காலை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் 137 எண்ணெய்க் கிணறுகள் அமைத்து எண்ணெய் எரிவாயு ஆய்வுப் பணிகளை மேற்கோள்ளவும் வேதாந்தா நிறுவனம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் எண்ணெய் எரிவாயுத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதையும் அந்த விண்ணப்பத்தில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இதற்குப் பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழும நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அது உண்மையெனில், அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கக் கூடாது. மேலும் இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

மேலும், `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர், தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் இந்த விண்ணப்பத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, `` நிலத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதைவிடவும், மிகவும் ஆபத்தானது கடலில் கிணறுகள் அமைப்பது. கடற்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதால் அங்குள்ள கடல் வளம், மீன்வளம் பாதிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட கடற்பசு உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள் உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கிலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களைப் பறிமாறிக்கொண்டு தங்களது பயணவழிகளையும் தீர்மானிக்கின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும் சீஸ்மிக் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கும்.

வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்

அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையும்; முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும்! எனவே, இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தால் கடல்வளம் பாதிப்படைந்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்கும். கடலைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்!" என்றார்.

ஏற்கெனவே, கடந்த 2021-ம் ஆண்டு, ஜூன் மாதம் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி., அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்த கடிதத்தை, தமிழக அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism