கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

Su.Venkatesan
Su.Venkatesan

கீழடி ஆய்வுகள் குறித்தும் மதுரை மண்ணின் ரகசியங்கள் குறித்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த விகடனில் தொடராக எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன்.

வைகை நதி நாகரிகம்! –1

ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்... ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, காதுகளில் பளிங்கால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன (Carnelian) மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்றதாக இருக்கிறது. இருவரும் விளை யாடிக்கொண்டிருக்கும்போது தாகம் எடுக்கிறது. உள்ளே இருக்கும் சிறுமியிடம் நீர் கொண்டுவரச் சொல்கிறார்கள். மேலும்

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

வைகை நதி நாகரிகம் ! - 2

மதுரை என்றாலே சவால்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் இன்று... நேற்று அல்ல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவன் உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களைப் பார்த்து ஒரு சவால்விட்டான்.

'ஒரு துலாக்கோளைக் கொண்டுவாருங்கள். அதன் ஒரு தட்டில், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’ என்றான். மேலும்

வைகை நதி நாகரிகம் ! -3

அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வைகையின் தொடக்க இடமான வெள்ளிமலையில் இருந்து, அது வங்கக் கடலில் கலக்கும் அழகன் குளம்- ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல் கள ஆய்வை நடத்தியது.

சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒருவகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும்

வைகை நதி நாகரிகம் ! -4

மழை நீர் ஓடி குளத்தில் சேர்வதைப்போல, மனித அனுபவம் கடந்தகாலம் எனும் தொட்டியில் இயல்பாகச் சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்தகாலத்தை எல்லாம் இறந்தகாலம் என வகைப்படுத்தி, 'இறந்ததை அழிப்பது அவசியம்தானே!’ என வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

ஆனால், இவற்றுக்கு நேர்மாறாகச் சிந்தித்தவர்கள் நமது முன்னோர்கள். இறந்துபோன ஒருவன், எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்பதற்கான எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார்கள். அவர்களது விடாப்பிடியான முயற்சியின் அடையாளங்களே நடுகற்கள்.

வைகை நதி நாகரிகம் ! - 5

நட்சத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு வானியலைக் கணிக்கும் முயற்சியாக இது இருக்கலாம். அதனால்தான் ஒரே திசை நோக்கி இவை இருக்கின்றன என சிலர் கூறுகின்றனர். இறந்த வீரர்களின் நினைவாக இவை நடப்பட்டன என்பது பொது உண்மை. இது நடுகல்லுக்கு முந்தைய வடிவம். மனிதன் இறந்தவுடன், அவனைப் புதைத்த இடத்தில் பெரும் பாறைகளைக் கொண்டுவந்து நட்டுவைத்தான். அதன் பின்னர் எழுத்துக்கள் கண்டறியப்பட்டவுடன், சிறிய கற்களைக் கொண்டுவந்து நட்டு அதில் இறந்தவனைப் பற்றி எழுதத் தொடங்கினான்.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

இறந்தவனின் அடையாளமாக பெரிய பாறை இருப்பதைவிட, சிறிய எழுத்துக்கள் இருப்பதே சிறப்பு என அவன் கண்டறிந்ததே, நாகரிகத்தின் அடுத்த கட்டம். ஆக, எழுத்துக்கள் பிறக்கும்போதே பெரும் பாறைகளை உருட்டிவிட்டுத்தான் பிறந்திருக்கின்றன. எழுத்தின் வலிமை, அது தொடங்கிய இடத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி இன்றைய மக்கள் ஆட்சிக்காலம் வரை எழுத்துக்களை சவால் நிறைந்த ஒன்றாகப் பார்ப்பதற்குக் காரணம், அவற்றால் எவ்வளவு வலிமையான ஒன்றையும் சாய்த்துவிட முடியும் என்பதுதான். வெம்பூர் குத்துக்கற்கள் கைவிடப்பட்ட ஒரு பழக்கத்தின் கடைசி எச்சமாக இன்றும் இருக்கின்றன. யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராக உறைந்து நிற்கின்றன.

வைகை நதி நாகரிகம் ! - 6

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து போவது ஒன்றும் புதிது அல்ல. அவன் தன் வாழ்நாளில் எத்தனையோ கப்பல்களைப் பார்த்தவன்தான். ஆனால், நீல நிறக் கடலில் எழும் அலைகளினூடே ஏறி இறங்கியபடி வரும் அந்தக் கப்பல் தனித்துவமான அழகோடு இருப்பதை அவன் கூர்ந்து கவனித்தான். அதன் அழகு அவனை சும்மா இருக்கவிடவில்லை. தரையில் கிடந்த உலோகக் குச்சி ஒன்றை எடுத்தவன், அந்தக் கப்பலைப் பார்த்தபடியே கையில் வைத்திருக்கும் பானை ஓட்டின் மேல் கீற ஆரம்பித்தான். அவனது கீறல்களின் மூலம் கொஞ்ச கொஞ்சமாக அந்தக் கப்பல் கோட்டோவியமாகப் பதிவானது.

வைகை நதி நாகரிகம் ! - 7

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

அப்படி எனில், 'ஓவியக் கலை கற்காத ஓர் ஆண் இதை வரைந்திருக்க மாட்டானா?’ என்றால், நிச்சயமாக அதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால், ஓவியக் கலை கற்காத ஆணுக்கு நேர்க்கோடுகளும் வளைவுகளும் இவ்வளவு நேர்த்தியாக வராது. அதுவும் கோடுகள் கோணலாகாமல் முதல் கீறலிலேயே தெளிவாக வர எந்த வாய்ப்பும் இல்லை. கண்டறியப்பட்ட பானை ஓட்டுக் கோட்டோவியமோ தெளிவான கோடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு கோடுகூட குறுக்குச்சால் ஓட்டவில்லை.

வைகை நதி நாகரிகம் ! - 8

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

சிந்துவெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட கப்பல் முத்திரைகள் அன்றைய செழிப்பு மிகுந்த நாகரிகத்தின் சான்றாக விளங்குகின்றன. சிந்துவெளியில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல், புராதன எகிப்தில் கட்டப்பட்ட கப்பலின் வடிவத்தைப்போல இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அதேபோல சுமேரிய நாகரிகத்தில் 'ஃபாரா’ (ஈராக்) என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல், சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைகை நதி நாகரிகம் ! - 9

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

அனைத்துத் திசைகளிலும் பிற நாடுகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலப்பரப்பைக்கொண்ட அவர்களுக்கு, தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவே பெரும் சாமர்த்தியமும் அடங்காத வீரமும் தேவைப்பட்டன. அவை, அவர்களுக்கு எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிக்கொடுத்தன; செல்வ வளத்தை கணக்கு இல்லாமல் கொண்டுவந்து சேர்த்தன. அந்த அளவற்ற செல்வச்செழிப்பு அவர்களின் படையை மேலும் வலிமையாக்கியது. சிந்துசமவெளி நாகரிகக் காலத்தில் இருந்து, ஒப்பற்ற நிலப்பகுதியாக வர்ணிக்கப்படும் இந்திய நிலப்பரப்பை, தங்களது எல்லைக்குள் கொண்டுவந்துவிடத் துடிக்கும் கனவு, கிரேக்கர்களை ஆட்டிப்படைத்தது. அந்தப் பெருங்கனவை அரங்கேற்ற அலெக்ஸாண்டர் தலைமையிலான படை, கிழக்கு திசையில் நகரத் தொடங்கியது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் நில அதிர்வை அந்தப் படைகள் ஏற்படுத்தின. வழிநெடுக நாடுகளை வகுந்துகொண்டு அந்தப் படை முன்னேறியது.

வைகை நதி நாகரிகம் ! - 10

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

வாழ்வை சிறந்த முறையில் நடத்த, பொருள் அடிப்படையாக இருக்கிறது. எனவே, பொருளீட்டும் பொருட்டு தலைவன் வட திசையில் பயணம் சென்றுள்ளான். அவன் பிரிவால் வாடும் தலைவிக்கு, தோழி ஆறுதல் கூறுகிறாள். அப்படி ஆறுதல் கூறும்போது அவன் சென்ற பாதை எவ்வளவு கொடியது என்பதை விளக்குகிறாள். அந்தப் பாதையின் தன்மையை வர்ணிக்கும் பாடல்களின் ஊடே வரலாறும் சமகால அரசியலும் படிந்து கிடக்கின்றன. வலிமைவாய்ந்த படை நடத்திய மௌரியர்கள், தங்களின் தேர்கள் செல்வதற்கு ஏற்ப மலைகளில் பெரும் பாறைகளை உடைத்து பாதை அமைத்தனர் என்றும், அந்தப் பாதையில் அவர்களின் தேர்கள் விடாது சென்றுகொண்டிருந்தன என்றும், தென் திசையில் படையெடுத்து வந்தனர் என்றும், செல்வச்செழிப்புடன் இருந்தனர் என்றும் சங்கக் கவிதைகள் பேசுகின்றன.

வைகை நதி நாகரிகம் !

பாகம் 1 : http://bit.ly/2kVi9Ud

பாகம் 2 : http://bit.ly/2kIUMNH

பாகம் 3 : http://bit.ly/2kXPYUx

பாகம் 4 : http://bit.ly/2mrZfEW

பாகம் 5 : http://bit.ly/2ksU7jf

பாகம் 6 : http://bit.ly/2mkPxUC

பாகம் 7 : http://bit.ly/2m08gF2

பாகம் 8 : http://bit.ly/2mt8PHC

பாகம் 9 : http://bit.ly/2kxW7H2

பாகம் 10 : http://bit.ly/2mnl6x3

பாகம் 11 : http://bit.ly/2kouUpY

பாகம் 12 : http://bit.ly/2kVGU2A

பாகம் 13 : http://bit.ly/2m4X1v6

இந்நிலையில், மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், எம்.பி சு.வெங்கடேசன். அப்போது கீழடியின் 4-ம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பேசுகையில், "10 நாள்களாக நாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கீழடியின் 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளைத் தமிழகத் தொல்லியல்துறை இப்போது வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.

அமர்நாத் மேற்கொண்ட ஆய்வின்போது 6 மீட்டர் ஆழக்குழி அமைத்து அதில் 3-வது மீட்டர் ஆழத்தில் கிடைத்த சாம்பிள்கள் கி.மு 290 காலத்தினதாக அமைந்தன. தற்போது, எதிர்பார்த்ததைவிட மேலாக கி.மு 6-ம் நூற்றாண்டுப் பதிவுகளின் சான்றுகளாக இந்த முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. அகழ்வில் இன்னும் ஆழம் சென்றால், இதற்கும் பிந்தைய காலத்தின் சான்றுகள் கிடைக்கும்.