Published:Updated:

379 உணவு வகைகள்; புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த பெண் வீட்டார்!

மாப்பிள்ளைக்கு விருந்து
News
மாப்பிள்ளைக்கு விருந்து

என் கணவருக்கு அனைத்து வகையான உணவுகளையும் செய்து தர வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக என் பெற்றோர் கடந்த பத்து நாட்களாக உணவிற்கான பட்டியலை தயார் செய்தனர்.

Published:Updated:

379 உணவு வகைகள்; புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த பெண் வீட்டார்!

என் கணவருக்கு அனைத்து வகையான உணவுகளையும் செய்து தர வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக என் பெற்றோர் கடந்த பத்து நாட்களாக உணவிற்கான பட்டியலை தயார் செய்தனர்.

மாப்பிள்ளைக்கு விருந்து
News
மாப்பிள்ளைக்கு விருந்து
மகர சங்கராந்தி திருநாளன்று புது மாப்பிள்ளைகளுக்கு மாமியார் வீட்டில் ஸ்பெஷல் விருந்து வைத்து கொண்டாடுவது ஆந்திர பகுதிகளில் வழக்கம்.

அந்தவகையில் ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினம் ஏலூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சங்கராந்தியை முன்னிட்டு தங்கள் வீட்டின் புது மாப்பிள்ளைக்கு 379 உணவு வகைகளுடன் விருந்தினை வைத்துள்ளனர். புத்த முரளிதர், கொருபள்ளி குசுமா இருவருக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த சங்கராந்தியை முன்னிட்டு கொருபல்லி குசுமாவின் பெற்றோர் புதுமாப்பிள்ளையான புத்த முரளிதருக்கு 379 வகையான உணவுகளுடன் பிரமாண்ட உணவு விருந்தினை வைத்து அசத்தியுள்ளனர். இதேபோல் கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 365 வகையான உணவு வகைகளுடன் விருந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஏலூர், விசாகப்பட்டினம்
ஏலூர், விசாகப்பட்டினம்

இதுபற்றிக் கூறிய கொருள்ளி குசுமா, "என் கணவருக்கு அனைத்து வகையான உணவுகளையும் செய்து தர வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக என் பெற்றோர் கடந்த பத்து நாட்களாக உணவிற்கான பட்டியலை தயார் செய்தனர். இந்த விருதினைக் கண்ட என் கணவர் ஆச்சர்யமடைந்தார்" என்றார். பிரமாண்ட உணவு விருந்தினை அனுபவித்த புத்த முரளிதர், "விருந்தில் இருந்த எல்லா உணவுகளையும் சுவைத்தேன். ஒவ்வொரு உணவும் வித்தியாசமான சுவையுடன் இருந்தது. கோனாசீமா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் இருக்கும் இந்த விருந்து கலாசாராம் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.