ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆன்லைனில் ஆரோக்கியம்... அசத்தும் சுமையா நாஸ்

சுமையா நாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுமையா நாஸ்

நாம வளர வளர நிறைய எதிர்வினை களும் வளரும்ங்கிறதை நல்லா புரிஞ்சுக் கிட்டேன். ஃபாலோயர்ஸ் கூடக்கூட மோசமான கமென்ட்ஸும் வர ஆரம்பிச்சது.

இன்ஸ்டாகிராமில் சுமையா நாஸ் பதிவிடும் ஃபிட்னெஸ் மற்றும் பிசியோதெரபி வீடியோக்களுக்கு பெரும் ரசிகப்பரப்பே உருவாகி யிருக்கிறது. அனைவரும் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்னைகளுக்கான காரணம் மற்றும் தீர்வுகளை 30 விநாடி களுக்குள் சொல்லி முடித்து விடுவதே இவரது ப்ளஸ். தெரபிஸ்ட் என்றாலும் வீடியோ ஜாக்கி போல கல கலப்பாகப் பேசுவது இவரது ஸ்டைல். சுமையாவை சந்தித்தோம்...

ஆன்லைனில் ஆரோக்கியம்... அசத்தும் சுமையா நாஸ்

“லைஃப்ல ஏதாவது செய்யணும் இல்லைன்னா வீட்டுல கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்கன்ற சூழல்லதான் நான் பிசியோதெரபி படிக்க முடிவெடுத்தேன். பிசியோதெரபியில இளநிலை, முதுநிலை முடிச்சப்புறம் சில கிளினிக்கு கள்ல வேலை பார்த்தேன். அதையடுத்து கொரோனா, லாக்டௌன்ல எங்கயும் வெளிய போக முடியாம இருந்தப்பதான் ஆன்லைன்ல பிசியோதெரபி கத்துக் கொடுக்குற ஐடியா வந்தது. ஆன் லைன்ல பண்றதுக்கான எந்த வழிகாட்டுதலும் இல்லாம நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். சிகிச்சை கொடுக்கணும்ங்கிறதுதான் முக்கிய நோக்கமா இருந்ததே தவிர சம்பாதிக்கணும்னு நினைக்கலை. என்னோட தெரபியால குணமடைஞ்ச வங்க, தானா முன்வந்து பணம் கொடுத்தாங்க. அப்புறம்தான் இதை ஆன்லைன்லயே எடுத்துட்டுப்போலாம்ங்கிற நம்பிக்கை வந்துச்சு. இன்னிக்கும் என்கிட்ட கன்சல்ட் டேஷன் இலவசம்தான். ட்ரீட்மென்ட்டுக்கு தான் சார்ஜ் பண்றேன். இந்த ரெண்டு வருஷங்கள்ல 500க்கும் மேற்பட்டவங்களுக்கு ஆன்லைன் வழியா சிகிச்சை கொடுத்திருக் கேன்” என்பவர் ஆன்லைன் சிகிச்சையில் பிசியோதெரபி மட்டுமல்லாமல் ஜும்பா டான்ஸ், ஃபிட்னெஸ் பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கற்றுத் தருகிறார். தான் இன்ஸ்டாவில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தது குறித்துப் பேசினார் சுமையா.

“என்னோட கன்டென்ட்டை நான் வீடியோவாக்கிப் போட லாம்னு பண்ண ஆரம்பிச் சேன். எல்லா மக்களுக்கும் எளிமையா புரியுற மாதிரி கொடுக்க நினைச்சேன். எந்த பொசிஷன்ல உட் காரணும், வண்டி ஓட்டு றப்போ நம்ம உடம்பு எப்படி இருக்கணும்னு என்னை சுத்தியிருக்கிறவங்க பண்ற தவறுகளைப் பார்த்து அதுல இருந்து கன்டென்ட் எடுக்குறேன். எல்லோருக்கும் பயன்படற மாதிரி, இதைப் பண்ணுங்க, இதைப் பண்ணாதீங்கன்னு சொன்னாலே போதும்’’ என்பவர், தன் வீடியோக்களை தானே ஷூட் செய்து, எடிட்டும் செய்கிறாராம்.

ஆன்லைனில் ஆரோக்கியம்... அசத்தும் சுமையா நாஸ்

“நாம வளர வளர நிறைய எதிர்வினை களும் வளரும்ங்கிறதை நல்லா புரிஞ்சுக் கிட்டேன். ஃபாலோயர்ஸ் கூடக்கூட மோச மான கமென்ட்ஸும் வர ஆரம்பிச்சது. நூறு நல்ல கமென்ட்ஸ் வந்தாலும் ஒரு நெகட்டிவ் கமென்ட் அத்தனையையும் காலி பண்ணிடுது. ஆரம்பத்துல அதுக்காக சங்கடப்பட்டிருக் கேன். இப்ப அதையெல்லாம் சிரிச்சுகிட்டே கடக்கப் பழகிட்டேன்” - எதார்த்தம் உணர்ந்தவர் விரைவில் ஃபிட்னெஸ் ஸ்டூடியோ தொடங்கவிருப்பதாகக் கூறுகிறார்.

“பிசியோ, ஃபிட்னெஸ், ஜும்பா, யோகான்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஸ்டூடியோ ஆரம்பிக்கணும்னு ஆசைப் பட்டேன். வீட்டுல கேட்டப்போ `கல்யாணத் துக்குத்தான் பணம் வெச்சிருக்கோம், கல்யாணம் பண்ணிக்கோ'னு சொன்னாங்க. அதனால நானே சம்பாதிச்சு ஸ்டூடியோ திறக்கறதுன்னு முடிவெடுத்தேன். கூடிய சீக்கிரம் இன்வைட் பண்றேன்” - நம்பிக்கையாகக் கூறுகிறார் சுமையா நாஸ்.