Published:Updated:

இராஜபாளையம்: அய்யனார் கோயில் நீரோடையில் திடீர் வெள்ளப்பெருக்கு; கயிறு கட்டி மீட்கப்பட்ட பக்தர்கள்!

அய்யனார் கோயில்
News
அய்யனார் கோயில்

இராஜபாளையம் அய்யனார் கோயில் நீரோடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்ககல் சிக்கிக்கொண்டவர்களை மீட்புப்படையினர் கயிறு கட்டி மீட்டு வந்தனர்.

Published:Updated:

இராஜபாளையம்: அய்யனார் கோயில் நீரோடையில் திடீர் வெள்ளப்பெருக்கு; கயிறு கட்டி மீட்கப்பட்ட பக்தர்கள்!

இராஜபாளையம் அய்யனார் கோயில் நீரோடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்ககல் சிக்கிக்கொண்டவர்களை மீட்புப்படையினர் கயிறு கட்டி மீட்டு வந்தனர்.

அய்யனார் கோயில்
News
அய்யனார் கோயில்

இராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோயில். இக்கோவிலுக்கு செல்லும் வழியில் நீரோடை உள்ளது. மலையடி வாரத்திலிருக்கும் அய்யனார்‌ கோயிலுக்கு பக்தர்கள் நீரோடையை கடந்துதான்‌ செல்லவேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பரவலாக பெய்துவரும் பருவமழை காரணமாக அய்யனார் கோயில் நீரோடையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அய்யனார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் நீரோடையில் குளிப்பதற்காக கோயிலில் முகாமிட்டிருந்தனர்.

கயிறுக்கட்டி மீட்பு
கயிறுக்கட்டி மீட்பு

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோயில் நீரோடையில் வழக்கத்தைவிட அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டது. இது அடுத்த சில நிமிடங்களிலேயே வெள்ளப்பெருக்காக மாறியது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும், நீரோடையில் குளிப்பதற்காக கோயிலுக்கு சென்றவர்களும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள்‌ வாகனங்களில் விரைந்து வந்தனர். தொடர்ந்து, மீட்புப்பணிகளை துரிதப்படுத்திய வீரர்கள், அக்கரையிலிருந்து இக்கரைக்கு கயிறுக்கட்டி பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மீட்டு வந்தனர்.

வெள்ளப்பெருக்கு
வெள்ளப்பெருக்கு

சுமார் 30-க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் இணைந்து பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக கயிறுக்கட்டி மீட்டனர். அய்யனார் கோயில் நீரோடை வெள்ளப்பெருக்கு குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர், இராஜபாளையம் வட்டாட்சியர் தலைமையில் வெள்ளப்பெருக்கு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அவர்களின் உடன்வந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு முதலுதவி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கில் யாரேனும் அடித்துச் செல்லப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.